பிப்ரவரி 2026 மாத ராசி பலன் - ரிஷபம்

february-2026-month-rasi-palan-rishabam
பிப்ரவரி 2026 மாத ராசி பலன் - ரிஷபம்

குருபகவான் 2-ம் வீட்டில் சஞ்சாரம் திருமண தடைகள் அகலும்.புதிய வாகன யோகம் உண்டாகும் ஒரு சிலருக்கு புது வீடு கட்டும் யோகம் உண்டு. லோன் எளிதில் கிடைக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட தொழில்கள் செழிப்படையும்.

பிப்ரவரி 13-ம்தேதி வரை 9ம் இடத்தில் சூரியன் பலவீனமாக காணப்பட்டாலும் 13-ம் தேதிக்கு பிறகு 10ம் இடமான தொழில் ஸ்தானத்துக்கு வருவதால்
தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும் பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும் அவர்களால் உதவி கிடைக்கும். அரசியல் செல்வாக்கு கூடும். கௌரவம் சமூக அந்தஸ்த்து உயரும்.தந்தை மகன் உறவு பலப்படும்.போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

ராகு 10ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பூர்வீக நிலங்களால் ஆதாயம் காணலாம். விற்பனை ஆகாத பழைய சொத்துக்கள் விற்பனையாகும்.
பங்காளிகளுக்குள் நல்லிணக்கம் ஏற்படும்.

ராசிக்கு 11 -ம் இடமான லாப ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும் தேக ஆரோக்கியம் காணப்படும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் சிலருக்கு வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடி வரும் அந்நிய மொழி நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
இம்மாதம் புதன் 10-ம் வீட்டில் பலமாக காணப்படுவதால் திடீர் பணவரவுகள் உண்டாகும்.

மனம் அமைதி பெறும் பண தேவைகள் பூர்த்தியாகும்.இம்மாத பங்குசந்தை முதலீடுகள் வருங்காலத்தில் லாபத்தை தரும் .

இம்மாதம் 23-ம் தேதிவரை செவ்வாய் பலவீனமாக 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் வீண் கோபங்களால் தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும் சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது தொழில் எதிரிகள் போட்டிகள் அதிகமாக காணப்படும் கவனம்.

சுக்கிரன் 9-மற்றும் 10-ம் இடத்தில் பலம் இழந்து காணப்படுவதால் பெண்களால் அவப்பெயர் உண்டாகும் கணவன் மனைவிக்குள் சண்டைகள் சங்கடங்கள் உண்டாகும்.

4-ம் இடத்து கேது தாயாரிடம் சண்டைகள் வீண் விவாதங்கள் தவிற்க்கவும் .குடும்பத்தில் தேவையற்ற கலகங்கள் உண்டாகும்.ஆன்மீக பயணங்களால் மன நிம்மதி கிடைக்கும்.

பிப்: 13,14, சந்திராஷ்டமம்

பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில்
மஹாலட்சுமி விழிபாடு செய்து வரவும் தை அமாவாசை அன்று குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.