பிப்ரவரி 2026 மாத ராசி பலன் - சிம்மம்

february-2026-month-rasi-palan-simmam
பிப்ரவரி 2026 மாத ராசி பலன் - சிம்மம்

வருட கோள்களில் குருபகவான் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்து யோகங்களை வாரி வழங்குவார் திருமண தடைகள் விலகும் தொழில் வியாபாரங்கள் செழிப்பை தரும்.பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

இம்மாதம் 23-ம் தேதிவரை 6-ம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதால் எடுத்த காரியம் யாவும் வெற்றியை தேடி தரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்.

சகோதர வழியில் ஆதாயம் பெறுவீர்கள். பிப்ரவரி 13-ம் தேதிவரை சூரியன் 6ம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்குவார்கள் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும்.

13 ம் தேதிக்கு பிறகு சூரியன் 7-ம் இடத்தில் பலவீனப்படுகிறார்.

4ம் தேதிவரை மட்டுமே புதன் 6-ம் இடத்தில் பலத்துடன் காண்ப்படுவார் பிறகு 7-ம் வீட்டில் பலவீனம் அடைகிறார் ஞாபக மறதி அதிக அளவில் காணப்படும். சோம்பல் அதிகரிகும்.

இம்மாதம் சுக்கிரன் 6 மற்றும் 7-ம் இடங்களில் பலவீனப்படுவதால் நண்பர்கள் மற்றும் சில பெண்களால் பிரச்சனைகள் வரக்கூடும் பழைய வண்டி வாகனங்கள் செலவு வைக்கும்.

அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் பண விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

ராசிக்குள் ராகுவும் 7-ம் வீட்டில் வீட்டில் கேதுவும் இருப்பதால் மருத்துவ விரைய செலவுகள் கூடும் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள் வேலையில் திருப்தி இருக்காது அலைச்சல் அதிகமாக காணப்படும் வெளியூர் பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும் உணவு கட்டுப்பாடு மிக அவசியம்.

பிப்ரவரி 20,21,சந்திராஷ்டமம்

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலயத்தில் உள்ள நவகிரக சூரியன் வழிபாடும் சண்டிகேஸ்வரர் வழிபாடும் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.