பிப்ரவரி 2026 மாத ராசி பலன் - கன்னி
கன்னிராசி நண்பர்களே இந்த பிப்ரவரி மாதம். ராசிக்கு 6-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும் புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
புதன் இம்மாதம் 4-ம் தேதி 6-ம் இடத்துக்கு செல்வதால் நன்மைகளை காணலாம் புத்திகூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள் பிப்ரவரி 13-ம் தேதி சூரியனும் 6-ம் இடத்தில் புதன் ராகுவுடன் இணைந்து நற்பலன்களை வழங்குவார் அரசியல் செல்வாக்கு கூடும் புதிய நபர்களால் நன்மைகள் உண்டாகும்.
புதிய பொலிவும் தேஜஸும் கூடும்.
23-ம் தேதிவரை செவ்வாய் 5-ம் இடத்தில் பலவீனப்படுவதால் முன் கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள்.
குருபகவான் 10-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரங்கள் மந்தநிலை காணப்படும் .உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
6-ம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் பெண்களால் அவப்பெயர்கள் உண்டாகும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் வாகனத்தில் மெதுவாக செல்லவும்.
7-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும் உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
ராசிக்கு 12-ம் இடத்தில் கேது இருப்பதால் மருத்துவ விரைவு செலவுகள் உண்டாகும் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள் உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும்.
பிப்ரவரி ,22,23.சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய பதன்கிழமைகளில் லட்சுமிநரசிம்மர் அல்லது யோகநரசிம்மர் வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.