பிப்ரவரி 2026 மாத ராசி பலன் - துலாம்

february-2026-month-rasi-palan-thulam
பிப்ரவரி 2026 மாத ராசி பலன் - துலாம்

சுக்கிரன் பலம் பெற்று 4' மற்றும் 5'ம் இடங்களில் சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் ஏற்படும் பழைய பகைகள் மறையும் புதிய வீடு புதிய வாகன யோகம் உண்டாகும் சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும்.

6'ம் இடமான உபஜெய ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் திடீர் பணவரவுகள் உண்டாகும் மருத்துவ சிலவுகள் குறையும்.

11-ம் இடத்தில் கேது இருப்பதால் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வர வேண்டிய பணம் வந்து சேரும் பண தேவைகள் பூர்த்தியாகும்.
குரு பகவான் பலம் பெற்று 9-ம் இடத்தில் செஞ்சாரம் செய்வதால் தடைபட்ட திருமணங்கள் தடை இன்றி நடக்கும் குழந்தை பாக்கியம் உண்டாகும் புதிய தொழில் முதலீடுகளால் மன மகிழ்ச்சி ஏற்படும் பணம் ஆபரண சேர்க்கை உண்டாகும்.

இம்மாதம் 4ம் தேதிவரை மட்டுமே புதன் 4ம் இடத்தில் பலமாக காணப்படுகிறார் பிறகு 5ம் வீட்டில் பலவீனபடுகிறார் ஞாபக மறதியும் பண இழப்புகளும் உண்டாகும்.

செவ்வாய் பலவீனமாக 4, மற்றும் 5-ம் இடத்தில் காணப்படுவதால் முன்கோபங்களால் தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும் சகோதரர்களிடம்விட்டுக் கொடுத்த போவது நல்லது.

சூரியன் இம்மாதம் 4 மற்றும் 5'ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் அரசாங்க பகைகள் வீண் வம்பு வழக்குகள் வரக்கூடும் தந்தையிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள்.

ராகு பலவீனமாக 5'ம் இடத்தில் காணப்படுவதால் பங்காளிகளுக்குள் தேவையற்ற மனஸ்தாபங்களும் பூர்வீக நில பிரச்சினைகளும் வரக்கூடும்.
பிப்:24,25, சந்திராஷ்டமம்.

பரிகாரம்:
இம்மாதத்தில் வரக்கூடிய அமாவாசை அல்லது பௌர்ணமி திதியன்று குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.