2026 ஆங்கில புத்தாண்டு மீனம் ராசி பலன்கள்

2026-new-year-meenam-rasi-palangal
2026 ஆங்கில புத்தாண்டு மீனம் ராசி பலன்கள்

டிசம்பர் 5ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது அதுவரையிலும் ராசிக்கு ஆறாம் இடமான உபதேச ஸ்தானத்தில் கேது அமர்ந்து நன்மைகளை வாரி வழங்குவார் பண தேவைகள் பூர்த்தியாகும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும் பதவி ஏறும் சம்பள உயர்வு கிடைக்கும் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும் சிலருக்கு வெளிநாடு வேலை வாய்ப்புகளும் உருவாகும்.

இந்த வருடம் இரண்டு முறை குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது குருபகவான் ராசிக்கு 4-ம் இடத்தில் அமர்ந்திருந்தாலும் வரக்கூடிய ஜூன் மாசம் 2-ம் தேதி நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சயில் குருபகவான் 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு செல்கிறார் அக்டோபர் 31-ம் தேதி வரை 5-ம் இடத்தில் அமர்ந்து நன்மைகளை வழங்குவார் இதனால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும் திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

ஜென்ம சனி நடப்பதால் எதிலும் நிதானம் தேவை பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்தவும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் ஒரு வேலையில் இறங்கும் முன் ஒன்க்கு இரண்டே முறை யோசித்து செயல்படவும் பங்காளிகளுக்குள் சொத்து பிரச்சனைகள் வரக்கூடும் வீண் வம்பு வழக்குகள் மாட்டிக் கொள்ளாதீர்கள் கவனம் தேவை.

12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வீண் விரைய செலவுகள் உண்டாகும் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும் பழைய வண்டி வாகனங்கள் மற்றும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள் பங்குச்சந்தை முதலீடுகள் தவிர்க்கவும்.

பரிகாரம்:
வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் வழிபாடு செய்து வரவும் புண்ணிய தலங்களுக்கு சென்று வரவும் நன்மைகள் நடக்கும்.