2026 ஆங்கில புத்தாண்டு மகரம் ராசி பலன்கள்

2026-new-year-magaram-rasi-palangal
2026 ஆங்கில புத்தாண்டு மகரம் ராசி பலன்கள்

வருட கோள்களில் சனிபகவான் ராசிக்கு 3-ம் இடமான உபஜெய ஸ்தானத்தில் அமர்ந்து நன்மைகளை வாரி வழங்குவார் புதிய தொழில் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும் எதிர்பாராத பண வரவுகளால் பண பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடி வரும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

ஜூன் 2-ம் தேதி வரை குருபகவான் 6-ம் இடத்தில் இருந்து நன்மைகளை பெரிதாக வழங்க மாட்டார் ஜூன் 2-ம் தேதி குரு பெயர்சியில் ஏழாம் இடத்துக்கு வந்து நன்மைகளை வழங்குவார் இந்த வருடம் இரண்டு முறை குரு பெயர்ச்சி நடைபெறுகிறது ஜூன் 2 மற்றும் அக்டோபர் 31ம் தேதிகளில் ஏழாம் இடம் என்பது களத்திர ஸ்தானம் என்பதால் திருமணம் தடை ஏற்பட்டவர்களுக்கு திருமணம் சுப காரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் உறவினர் மூலமாக நல்ல செய்தி கிடைக்கும் அக்டோபர் 31-ம் தேதி எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்துக்கு செல்வதால் சில குழப்பங்களும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு கவனம்.

டிசம்பர் 5-ம் தேதி வரை ராகு 2-ம் இடத்தில் கேது 8-ம் இடமான அஷ்டமஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் யாரையும் பகைத்து கொள்ளாதீர்ள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும் உடல் நல குறைபாடுகள் வர வாய்ப்புகள் உண்டு அலைச்சல் அதிகமாக காணப்படும் வேலையில் பணி சுமை அதிகமாகும் மேல் அதிகாரிகளிடம் கெட்ட பெயர் வாங்கும் சூழல் உருவாகும் சிலருக்கு வேலைக்கு ஆபத்து கூட வரலாம் பணியிடை மாற்றங்களால் மன உளைச்சலும் சங்கடங்களும் உண்டாகும் பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்க்கவும்.

பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் கால பைரவருக்கு அர்ச்சனையும் வழிபாடும் செய்து வரவும்
இயலாதவர்களுக்கு உணவு தாருங்கள் நல்லதே நடக்கும்.