2026 ஆங்கில புத்தாண்டு விருச்சிகம் ராசி பலன்கள்
நவகிரக கோள்களில் வருட கோள்களான குரு சனி ராகு கேது மையப்படுத்தி சொல்லக்கூடிய பலன்களை வருட பலன்கள் என்கிறோம் அவ்வகையில் கேது ராசிக்கு 10-ம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வாரி வழங்குவார் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் புதிய தொழில் மூலமாக நல்ல வருமானத்தை பெற முடியும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் வழிபாடு தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
தற்சமயம் அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் குருபகவான் அமர்ந்திருந்தாலும் வருகின்ற ஜூன் மாசம் 2-ம் தேதி ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு குருபகவான் செல்வதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் தடைபட்ட திருமணங்கள் தடை இன்றி நடக்கும் இவருடம் இரண்டு முறை குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது.ஜூன் 2-ம் தேதியும் அக்டோர் 31-ம் தேதியும்.
ஜூன் 2 முதல் அக்டோபர் 31-ம் தேதிவரை குரு பலம் பெற்றிருப்பார்.
ராசிக்கு 4-ம் இடத்தில் ராகுவும் 5-ம் இடத்தில் சனிபகவானும் அமர்ந்திருப்பதால் தேவையில்லாத மனக்குழப்பங்கள் வரும் பண விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்தவும் யாருக்கும் ஜாமீன் கை எழுத்துகள் போடாதீர்கள் தாயாரிடம் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் பூர்விகத்தை விட்டு தள்ளி இருக்கும் சூழல் உருவாகும் சிலருக்கு வேலைவாய்ப்புக்காக வெளியூருகள் அல்லது வெளிநாடுகள் தங்கும் சூழல் உருவாகும் பண வரவுக்கேற்ப செலவுகளும் உண்டாகும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்கிழமைகளில் மலைக்கோவில் முருகன் சந்நதிக்கு சென்று வழிபாடு செய்து வரவும் கிருத்திகை நட்சத்திரம் சஷ்டி திதியன்று விரதம் இருக்கவும் நல்லதே நடக்கும்.