2026 ஆங்கில புத்தாண்டு துலாம் ராசி பலன்கள்

2026-new-year-rasi-palangal
2026 ஆங்கில புத்தாண்டு துலாம் ராசி பலன்கள்

இந்த வருடம் இரண்டு முறை குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது தற்சமயம் ஜூன் மாதம் 2-ம் தேதி வரை குருபகவான் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து நற்பலன்களை வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும் திருமண தடைகள் விலகும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் நல்ல லாபத்தை பெற முடியும்.

ஜூன் 2ம் தேதி 10-ம் இடத்துக்கு வருகிறார் அக்டோர் 31-ம் தேதி வரை 10-ம் இடத்தில் அமர்ந்து சிறு குழப்பங்களையும் தொழில் நஷ்டத்தையும் ஏற்படுத்தினாலும் அக்டோபர் 31-ம் தேதி லாப ஸ்தானமான 11-ம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார் இதனால் திரும்பவும் குருபலன் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை காண முடியும்.

இவ்வருடம் முழுவதும் சனிபகவான் 6-ம் இடமான உபஜெய ஸ்தானத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்குவார் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் புதிய தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெற முடியும் வெளியூர் பயணங்களில் மகிழ்ச்சி உண்டாகும் வெளிநாடு வேலை தேடுபவருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வழக்குகள் சாதகமான முடிவுகளை தரும்.

வருகின்ற டிசம்பர் மாதம் 5-ம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது அதுவரையிலும் ராசிக்கு 3-ம் இடத்தில் கேது அமர்ந்து நன்மைகளை வழங்குவார் புதிய அறிமுகங்கள் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் காணப்படும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் மனம் தெளிவு பெறும்.

ராசிக்கு 5-ம் ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதால் பிள்ளைகளுடன் கனிவாக நடந்து கொள்ளுங்கள் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள் பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்க்கவும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள்.

பரிகாரம்:
வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்து வாருங்கள் எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றி வாருங்கள் ராகுகால பூஜை சிறப்பை தரும் நல்லதே நடக்கும்.