2026 ஆங்கில புத்தாண்டு சிம்மம் ராசி பலன்கள்
இவ்வருடம் இரண்டு முறை குரு பெயர்ச்சி நடைபெறுகிறது ஜூன் இரண்டாம் தேதியும் அக்டோபர் 31ஆம் தேதியும் குரு பெயர்ச்சி அடைகிறார்.
ஜூன் இரண்டாம் தேதி வரை குரு பகவான் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்து நற்பலன்களை வாரி வழங்குவார் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் திருமண சுப காரியங்கள் தடை இன்றி நடக்கும் பணம் சேமிப்புகள் உண்டாகும்.
ஜூன் இரண்டாம் தேதி 12-ம் இடத்துக்கும் அக்டோபர் 31-ம் தேதி ராசிக்குள்ளும் குருபகவான் சஞ்சரிப்பதால் பல குழப்பங்களும் மனசங்டங்களும் விரையங்களும் உண்டாகும் கவனத்துடன் செயல்படுங்கள்.
ராசிக்குள் கேதுவும் 7-ம் ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்திருப்பதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனைகள் சண்டைகள் வரக்கூடும் உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் உணவு கட்டுப்பாடு மிக அவசியமாகும் உடல் நல குறைபாடுகள் வரக்கூடும் புதிய மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் யாரிடமும் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள்.
அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் சனிபகவான் அமர்ந்திருப்பதால் வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும் பணியிடை மாற்றங்களால் மன மகிழ்ச்சி கெடும் சொத்து பிரச்சனைகளும் வரக்கூடும் கவனம்.
பரிகாரம்:
வாரந்தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் நவகிரக பூஜை செய்து வரவும் அமாவாசை அல்லது பௌர்ணமி தினத்தன்று குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.