2026 ஆங்கில புத்தாண்டு கடகம் ராசி பலன்கள்

2026-new-year-rasi-palangal
2026 ஆங்கில புத்தாண்டு கடகம் ராசி பலன்கள்

இவ்வருடம் இரண்டு முறை குரு பெயர்ச்சி நடைபெறுகிறது ஜூன் மாதம் 2-ஆம் தேதியும் மற்றும் அக்டோபர் மாதம் 31-ம் தேதியும் குரு பெயர்ச்சி நடைபெறுகிறது அவ்வகையில் உங்கள் ராசியான கடக ராசிக்கு 12-ம் இடத்தில் அமர்ந்து தீய பலன்களை தந்து கொண்டிருந்த குரு பகவான் ஜூன் 2-ம் தேதி ராசிக்குள் வருகிறார்.

ராசிக்குள் அமர்ந்தாலும் பெரிய பலன்களை வழங்க மாட்டார் சில மனக்குழப்பங்கள் காணப்படும். அக்டோபர் 31-ம் தேதி குருபகவான் ராசிக்கு 2-ம் இடமான தனஸ்தானத்துக்கு சென்று நற்பலன்களை வழங்குவார் திருமண தடைகள் விலகும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷம் நிலவும்.

புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும் பண சேமிப்புகள் உண்டாகும்.

அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் ராகு அமர்ந்திருப்பதால் சிறு விரையங்கள் உண்டாகும். மனதில் குழப்பங்கள் காணப்படும். உடல்நலக் குறைபாடுகள் உண்டாகும். மருத்துவ விரைய செலவுகளும் உருவாகும்.

ராசிக்கு 2-ம் இடத்தில் கேது இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. அன்னிய மொழிகாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள்.

ராசிக்கு 9-ம் இடமான பாக்ய ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்துக்கள் பிரச்சனைகள் உண்டாகும். பூர்வீகத்தை விட்டு தள்ளி இருக்க வேண்டிவரும் தந்தையாருடன் கருத்து வேறுபாடுகள் உருவாகும். தந்தையுடன் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள் வீண் வாக்குவாதங்கள் தவிர்க்கவும்.

பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் அனுமான் வழிபாடு செய்து வரவும். இயலாதவர்களுக்கு உதவி செய்து வாருங்கள் குலதெய்வ வழிபாடு சிறப்பை தரும் நல்லதே நடக்கும்.