2026 ஆங்கில புத்தாண்டு மிதுனம் ராசி பலன்கள்
மிருகசீரிஷம் 3,4.திருவாதிரை.புனர்பூசம் 1,2,3 ம் பாதம்.
வருட பலன்கள் என்பது வருட கோள்களை வைத்து சொல்லக்கூடிய பலன்கள் ஆகும் குரு சனிபகவான் ராகு கேது ஆகிய கோள்களை முன்னிறுத்தி சொல்லக்கூடிய பலன்கள் ஆகும்.
இவ்வருடம் முழுவதும் சனி பகவான் ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து நற்பலன்களை வாரி வழங்குவார் தொழில் முன்னேற்றம் காணப்படும் புதிய தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெறுவீர்கள் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும் தன சேமிப்புகள் உண்டாகும் வெளியூர் வேலை வாய்ப்புகள் தேடி வரும் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
இந்த வருடம் இருமுறை குரு பெயர்ச்சி நடைபெறுகிறது ஜூன் 2-ம் தேதி மற்றும் அக்டோபர் 31தேதியும் தற்சமயம் ராசிக்குள் அமர்ந்த குரு பகவான் ஜூன் 2-ம் தேதி ராசிக்கு 2-ம் இடமான தனஸ்தானத்திற்கு செல்கிறார் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை இரண்டாம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வாரி வழங்குவார் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் தடைபட்ட திருமணங்கள் தடையின்றி நடக்கும் குழந்தை பாக்கியம் உண்டாகும் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.
விவாகரத்து பெற்றவர்களுக்கு மறுமணம் நடக்கும்.
டிசம்பர் 5-ம் தேதி வரை கேது ராசிக்கு மூன்றாம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்குவார் மருத்துவ செலவுகள் கட்டுக்குள் வரும் தேக ஆரோக்கியம் மேம்படும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள் மனநிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.
9-ம் இடத்தில் ராகு அமர்ந்திருப்பதால் தந்தையாரின் உடல் நலத்திற்கு சிறுசிறு பிரச்சனைகள் வரக்கூடும் பூர்வீக சொத்துக்களால் பிரச்சனைகள் உண்டாகும் பங்காளிகளுக்குள் மனசங்கடங்களும் கசப்புகளும் உண்டாகும் கோர்ட்டு கேஸ் வழக்குகள் வரக்கூடும் கவனம்.
பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் ராகுகால வேளையில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.