2026 ஆங்கில புத்தாண்டு மேஷம் ராசி பலன்கள்
அஸ்வினி 1,2,3,4. பரணி கார்த்திகை 1,ம் பாதம் வரை.
குருபகவான் ராசிக்கு 3-ம் இடத்திலும் ஜூன் 2-ம் தேதி 4ம் இடத்திலும் நின்று பலன்களை வழங்குவார் குறிப்பாக குருபகவான் 3,மற்றும் 4ம் ஸ்தானங்களில் பெரிய நற்பலன்களை வழங்காது.
அக்டோர்பர் 31ம் தேதி சிம்மத்துக்குள் நுழைகிறார் இவ்வருடம் குரு இரட்டை பெயர்ச்சி அடைகிறார் இதில் அக்டாேபர் மாதம் முதல் 5-ம் ஸ்தானத்தில்.
நற்பலன்களை வழங்குவார்.
இருந்தாலும் அக்டோபர் மாதம் வரை வீண் ஆடம்பர செலவுகளை குறைப்பது நன்று கடன் வாங்குதல் கொடுக்கல் விவகாரங்களில் கவனம் செலுத்துங்கள்.
டிசம்பர் மாதம் 5-ம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறும்.
அதுவரை ராகு 11-ம் இடத்தில் நற்பலன்களை வழங்குவார்.
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் புதிய தொழில்கள் மூலமாக நல்ல லாபத்தை பெறுவீர்கள் வருடம் முழுவதும் நல்ல பலனை ராகுவால் எதிர்பார்க்கலாம்.
5-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் தொழில் போட்டிகள் இருக்கும் வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
உதவிகளும் சில நேரங்களில் உபத்திரமாக மாறும். பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.
12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாக காணப்படும் உடல் உபாதைகளும் உண்டாகும்.
கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நன்று. உறவினர்களால் ஒருசில விரையங்களும் இழப்புகளும் உண்டாகும் கவனம்.
பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமை மற்றும் சதுர்த்தி சங்கடசதுர்த்தி நாளில் வினாயக பெருமானுக்கு அர்ச்சனை செய்து வரவும் நல்லதே நடக்கும்.