மகரம் டிசம்பர் 2025 ராசி பலன்கள்

magaram-december-2025-rasi-palangal
மகரம் டிசம்பர் 2025 ராசி பலன்கள்

சனிபகவான் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் நோய் நொடிகள் விலகும் மருத்துவ சிலவுகள் குறையும்.
திடீர் பண வரவுகள் உண்டாகும்.

டிசம்பர் 16-ம் தேதிவரை சூரியன் பலம் பெற்று 11-ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் அரசு அனுகூலங்கள் உண்டாகும் பெரிய மனிதர்களின் நட்பும் பாராட்டும் உதவிகளும் கிடைக்கும்.

தந்தை மகன் உறவு பலப்படும்.
சுக்கிரன் இம்மாதம் 11 மற்றும் 12-ம் இடங்களில் பலமாக காணப்படுவதால் பெண்களால் நன்மைகள் ஏற்படும் .கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும் புதிய வண்டி வாகன யோகம் உண்டாகும்.

புதனும் 11 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சோம்பல் களையும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் எந்த வேலையாக இருந்தாலும் உடனடியாக முடித்து காட்டுவீர்கள். பங்குசந்தை முதலீடுகள் லாபத்தை தரும்.

2ம் இடத்தில் ராகு இருப்பதால் ஜாமீன் கையெழுத்துக்கள் தவிற்க்கவும்.
பங்களிகளுக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.

டிசம்பர் 7-ம் தேதிக்கு பிறகு செவ்வாய் 12-ம் வீட்டில் பலவீனபடுவதால் அவசர முடிவுகள் தவிற்க்கவும்.முன் கோபம் விளைவுகளை ஏற்படுத்தும்.
6-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் தொழில் முதலீடுகள் தவிற்க்கவும் ஆடம்பர சிலவுகள் குறைப்பது நல்லது.

பண சேமிப்புகள் கரையும் சூழலும் கடன் வாங்கும் சூழலும் ஏற்படும் கவனம்.கேதுவும் 8-ம் பாவகத்தில் பலவீனமாக இருப்பதால் தந்தை மகனுக்குள் கருத்து மோதல்கள் உருவாகும் வீண் வாக்குவாதங்கள் தவிற்ப்பது நல்லது.

டிசம்பர் 10,11,12,சந்திராஷ்டமம்

பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் கால-பைரவருக்கு அர்ச்சனை வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.