தனுசு டிசம்பர் 2025 ராசி பலன்கள்

thanusu-december-2025-rasi-palangal
தனுசு டிசம்பர் 2025 ராசி பலன்கள்

சில கோள்கள் 12ஆம் இடத்தில் இருந்தால் அசுபமான பலன்களை வழங்குவார்கள் ஆனால் புதன் சுக்கிரன் போன்ற கோள்கள் 12-ஆம் இடத்தில் நன்மையான பலன்களை வழங்குவார்கள் அவ்வகையில் இம்மாதம் புதன் ராசிக்கு 12-ஆம் இடத்தில் இருப்பதால் திடீர் பணவரவுகள் உண்டாகும் எதிர்பாராத திருப்பங்களும் அதனால் நன்மைகளும் உண்டாகும் புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள்.

இம்மாதம் 12,ம் வீட்டிலும் ராசிக்குள்ளும் சுக்கிரன் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி உறவு பலப்படும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் நல்ல லாபத்தை தரும்.

வழக்கம்போல் ராகுபகவான் ராசிக்கு 3,ம் இடத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில்கள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் இதுவரை இருந்து வந்த கோர்ட் கேஸ் வழக்குகள் வாபஸ் ஆகும்.

7-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் திருமண சுப காரியங்கள் நடக்கும் குழந்தை பாக்கியம் தடையின்றி கிடைக்கும்.

9-ம் வீட்டில் கேது இருப்பதால் வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.
சூரிய பகவான் 12 மற்றும் ஒன்றாம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் தேவையற்ற விஷயங்களில் தலையிடாதீர்கள்.

4,ம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள் மருத்துவ விரைய செலவுகள் உண்டாகும் கவனம்.
இம்மாதம் செவ்வாய் பலவீனமாக காணப்படுவதால் முன் கோபம் அதிக அளவில் காணப்படும் யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும் கவனம்.

டிசம்பர் 8,9,10 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய் கிழமைகளில் நவகிரக அங்காரகன் (செவ்வாய்) வழிபாடும் முருகப்பெருமானுக்கு அர்ச்சனையும் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.