சிம்மம் டிசம்பர் 2025 ராசி பலன்கள்

simmam-december-2025-rasi-palangal
சிம்மம் டிசம்பர் 2025 ராசி பலன்கள்

புதன் ராசிக்கு 3,மற்றும் 4ம் இடங்களில் பரம் பெற்று சஞ்சரிப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் ஞாபக சக்தி அதிகமாக காணப்படும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள்.பங்குசந்தை டிரேடிங் ஆன்லைன் வியாபாரங்கள் நல்ல லாபத்தை தரும்.

குருபகவான் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும் கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறும்.

சுக்கிரன் 4 மற்றும் 5-ம் இடங்களில் பலப்படுவதால் புதிய வாகன யோகம் உண்டு பெண்களால் நன்மைகள் உண்டாகும்
உறவினர்கள் வருகை மகிழ்வை தரும்.

சூரியன் ராசிக்கு 4 மற்றும் 5ம் இடங்களில் பலவீனமாக சஞ்சரிப்பதால் அரசாங்க பகைகள் வரக்கூடும் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.தந்தை மகன் உறவுக்குள் லேசான விரிசல் விழும்.

செவ்வாய் இம்மாதம் 4,மற்றும் 5,ம் இடங்களில் பலவீனமாக இருப்பதால் முன் கோபம் அதிகமாக காணப்படும் அவசர முடிவுகளால் பணம் இழக்கும் அபாயமும் உள்ளது கவனம்.

ராசிக்குள் கேது இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
சனி 8,ம் இடமான அஷ்டமச்சனியாக உலா வருவதால் மனக்குழப்பம் காணப்படும் யாரை நம்புவது என மனம் சஞ்சலம் அடையும் தொழில் போட்டிகள்
அதிகமாக காணப்படும்.

7-ம் வீட்டில் ராகு இருப்பதால் வேலையில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகமாக காணப்படும் புதிய பணியிடை மாற்றங்களும் உண்டாகும்.
டிசம்பர் 1,2 மற்றும் 27,28,ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் நவகிரக வழிபாடும் நவகிரக நாயகன் வினாயகருக்கு அர்சனையும் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.