துலாம் டிசம்பர் 2025 ராசி பலன்கள்

thulam-december-2025-rasi-palangal
துலாம் டிசம்பர் 2025 ராசி பலன்கள்

சுக்கிரன் ராசிக்கு 3,மற்றும் 4ம் வீடுகளில் சஞ்சரிப்பதால் காரிய தடைகள் விலகும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தை காணலாம்.
கணவன் மனைவி உறவு பலப்படும்.உறவினர்களிடமிருந்து நற்செய்தி கிடைக்கும்.புதிய வாகன யோகம் உண்டு.

குருபகவான் டிசம்பர் 5-ம் தேதி அதிசாரகதி முடித்து திரும்பவும் ராசிக்கு 9-ம் வீட்டிற்கே வந்திருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

கேது 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் ஆன்மீக எண்ணங்கள் உதிக்கும். வெளிநாடு வேலை வாய்புகள் உருவாகும்.

6,ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் உடல் ஆரோக்கியம் காணப்படும் மருத்துவ செலவுகள் கட்டுக்குள் வரும்.எதிபாராத பண வரவுகளால் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

டிசம்பர் 7-ம் தேதிக்கு பிறகு 3-ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதால் நினைத்த காரியம் யாவும் கைகூடும் மன அமைதி கிடைக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

மாத பிறப்பாதி சூரியன் 3ம் இடத்துக்கு செல்வதால் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.அரசியல் செல்வாக்கு அரசாங்க அனுகூலங்கள் உண்டாகும் தந்தை மகன் உறவு பலப்படும்.வெளி வட்டார பழக்கம் விரிவடையும்.

2,ம் இடத்தில் புதன் சஞ்சரிப்பதால் ஞாபகமறதி அதிகமாக காணப்படும் ஏமாற்றங்கள் நேரும் கவனம். பண விவகாரங்களில் கவனம் செலுத்துங்கள்.
5,ம் வீட்டில் ராகுபகவான் சஞ்சரிப்பதால் பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் கோபத்தை காட்ட வேண்டாம்.
யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.

டிசம்பர் 4,5,மற்றும் 31-ம் தேதிகளில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்க்கிழமைகளில் நவகிரக சந்திரன் வழிபாடும்
பௌர்ணமி திதியன்று வீட்டில் சத்திய நாரண பூஜையும் செய்து வாருங்கள் செல்வ கடாக்ஷ்ம் உண்டாகும் நல்லதே நடக்கும்.