விருச்சிகம் டிசம்பர் 2025 ராசி பலன்கள்

viruchigam-december-2025-rasi-palangal
விருச்சிகம் டிசம்பர் 2025 ராசி பலன்கள்

இந்த டிசம்பர் மாதம் சுக்கிரன் பலம் பெற்று 1 ' மற்றும் 2-'ம் இடத்தில் இருப்பதால் சுபச் செலவுகள் உண்டாகும் அடிக்கடி விருந்துகளில் கலந்து கொள்வீர்கள் குடும்பத்துடன் உல்லாச பயணம் மேற்கொள்ளீர்கள். புதிய வாகன யோகமும் உண்டு. கணவன் மனைவி உறவு பலப்படும்.
வருட கோள்களில் கேது 10-ம் இடத்தில் இருப்பதால் மருத்துவ விரைய செலவுகள் குறையும் பண சேமிப்புகள் உண்டாகும் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள்.

சூரியன் இம்மாதம் 1, மற்றும் 2'ம் இடங்களை சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் பத்திர பதிவுகள் கவனம் தேவை அரசாங்க பகை வரக்கூடும்.

செவ்வாயும் இம்மாதம் பலவீனமாக இருப்பதால் முன் கோபத்தை தவிர்க்கவும் சகோதரர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள்.அவசர முடிவுகள் தவிற்க்கவும்.

1-'ம் இடத்தில் புதன் சஞ்சரிப்பதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் பண விரையங்கள் உண்டாகும் நண்பர்களிடம் கவனத்தோடு இருக்கவும் கூட்டுத்தொழில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்க்கவும்

வருட கோள்களில் ராகுபகவான் 4'ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு மனை நிலம் வாங்கும் பொழுது பத்திர பதிவுகளை சரிபார்க்கவும்.

5'ம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சனிபகவான் இருப்பதால் பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் அன்னிய மொழிக்காரர்களிடம் உஷாராக இருங்கள். வெளிநாடுகள் பணிபுரிவதற்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.

8'ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் தொழிலுக்காக புதிய முதலீடு போடாதீர்கள் வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும்.ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

டிசம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்:
சனிக்கிழமைகளில் சிவாலங்களில் உள்ள நவகிரக வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.