Breaking News :

Sunday, May 19
.

தாம்பத்யம் ஏன் எப்படி எதற்கு?


தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஆயுதம். உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்கமாக இருந்தால் அது முழுமையான காதலாகாது.

உறவின் போது உணர்ச்சிப் பூர்வமான, அன்பான பந்தம் கணவனுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்களான தொடுதல், முத்தமிடுதல் உள்ளிட்டவை தாம்பத்யத்தில் முக்கிய அம்சமாகும். ஸ்பரிசம் மூலமே உணர்வு தூண்டப் படுகிறது.

மனித உடல் நரம்புகளால் மூடப்பட்டது. உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிக மாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும். எண்ணற்ற பெண்கள் உறவுக்கு முந்தைய முன்தொடுதலை விரும்புவதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறி யப்பட்டுள்ளது.

நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போக லாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும்.

அக்கறை உள்ள அன்பு, கவனிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும். இதனால் மனரீதியாகவும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

 முன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உட லெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போலவே, பாலியல் குறிக்கோளாக இல்லா மல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொடுதல் இவையும் பெண்களுக்கு பிடித்தமான செயல்களாகும்.

மிருதுவான ஸ்பரிசம், மிருதுவான, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்களில் உணர்ச்சியை தூண்ட போதுமானவை. பின் முதுகை தட வுதல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக்கும்.

கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் இருக்கின்றன. இவற்றை ஆண்கள் தங் களின் மனைவிக்கு ஏற்றவாறு கையாளலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.