Breaking News :

Sunday, May 19
.

தொப்பையை குறைக்க வேண்டுமா ...?


தொப்பையை குறைக்கும் 

உத்தான பாதாசனம்

 

கர்பபை வலுவடைய வேண்டுமா...?

 

விரைவாக தொப்பையை குறைக்க வேண்டுமா ...?

 

தூக்கத்தில் விந்து வெளியேறுவதை தடுக்க வேண்டுமா....?

 

வயிறு பொருமல் வாயு தொந்தரவு நீங்க வேண்டுமா....?

 

CORE MUSCLE வலுவடைய வேண்டுமா...?

 

ஜீரண உறுப்புகள் நன்கு செயல்பட வேண்டுமா...?

 

மாணவர்களுக்கு நியாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா...?

 

இவை அனைத்தையும் சீர்செய்யும்... அற்புத ஆசனம்... உத்தான_பாதாசனம் 

 

பார்ப்பதற்கு எளிதாக இருக்கும்...ஆனால் சற்றே கடின ஆசனம் எனலாம்...விடா முயற்சியுடன் முயன்றால்...எளிதில் வந்து விடும்...

 

செயல்முறை:

 

விரிப்பில் மல்லாந்து படுக்கவும்...

 

கைகளை தலைக்கு மேல் கொண்டு சென்று விரிப்பில் வைக்கவும்...

 

மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே ..கால் மூட்டுகளை மடக்காமல் ...கால்களை தரையிலிருந்து 1 அடி தூக்கி (30 டிகிரி )நிறுத்தி...ஆழ்ந்த சுவாசம் 10 எடுக்கவும்....

 

அதேநிலையிலிருந்து...கால்களை மீண்டும் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே ...60 டிகிரி கோணத்தில்...நிறுத்தி...ஆழ்ந்த சுவாசம் 10 எடுக்கவும் ...

 

மீண்டும் அதே நிலையிலிருந்து கால்களை ...மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே ...90 டிகிரிக்கு நிறுத்தி...ஆழ்ந்த சுவாசம் 10 எடுத்து...மெதுவாக...கால்களை ..மூச்சை வெளியேற்றிக்கொண்டே ...விரிப்பில் வைத்து...சிறிது ஒய்வெடுக்கவும்...

 

தற்போது கால்களை மூச்சை  உள்ளிழுத்த வாறு ...மீண்டும் 90டிகிரிக்கு வைத்து...ஆழ்ந்த சுவாசம் 10 எடுத்து...

 

கால்களை ..மூச்சை வெளியேற்றிக்கொண்டே 60 டிகிரிக்கு வைத்து...ஆழ்ந்த சுவாசம் 10 எடுத்து...

 

மீண்டும் மூச்சை வெளியேற்றிக்கொண்டே கால்களை ...30 டிகிரி கோணத்தில் வைத்து... ஆழ்ந்த சுவாசம் 10 எடுத்து....

 

இறுதியில் மூச்சை வெளியேற்றியவாறு..கால்களை விரிப்பில் வைத்து ஒய்வெடுக்கவும்...இது ஒரு சுற்று...

 

இம்முறையில் 3 சுற்றுகள் செய்யலாம்.

 

ஆரம்ப காலத்தில் 5 சுவாசங்கள் போதும்..

 

மாற்று ஆசனமாக கண்டிப்பாக 5 சுற்றுகள் #புஜங்காசனம் செய்ய வேண்டும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.