Breaking News :

Sunday, May 19
.

வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி?


தினமும் உணவில் சாலட் சேர்த்து கொண்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

தேவையான பொருட்கள் : 

கேரட் - 2

முட்டைகோஸ் - 50 கிராம், 

தக்காளி - 1

வெள்ளரிக்காய் - 1

குடமிளகாய் - 1, 

எலுமிச்சைப் பழம் - ஒன்று, 

கொத்தமல்லித்தழை - சிறிதளவு, 

கடுகு - அரை டீஸ்பூன் 

பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் 

பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், 

எண்ணெய் - அரை ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை : 

* பாசிப்பருப்பை குழையாமல் வேகவைத்து கொள்ளவும்.

* வெள்ளரிக்காய், கேரட், முட்டைகோஸை துருவி கொள்ளவும்.

* தக்காளியின் விதையை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குடமிளகாயை மெலிதாக வெட்டி கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் காய்கறிகளைப் போட்டு வெந்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் நன்றாக கலக்கவும். 

* கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கி இறக்கி, காய்கறிக் கலவையில் சேர்க்கவும். 

* துருவிய வெள்ளரிக்காய், நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.

* பரிமாறும் முன் எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.