Breaking News :

Sunday, May 19
.

வேர்க்கடலையின் ஆச்சரியமான 8 நன்மைகள்!


பாதாம், பிஸ்தா, முந்திரி அளவுக்கு வேர்க்கடலைக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. விலைக் குறைவு என்பதாலே, எளிதில் கிடைப்பதாலே என்னவோ தெரியவில்லை... வேர்க்கடலையைப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் உயர் தரமான புரதச்சத்து, அதிகப்படியான வைட்டமின்கள், தாது உப்புக்கள் கொண்டது வேர்க்கடலை. வேர்க்டலையின் ஆச்சரியமான பலன்களைப் பற்றி பார்ப்போம்.

வேர்க்கடலையில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள oleic acid என்ற வேதிப்பொருள் இதயத்தின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இதய நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக இருந்தால் இதய நோய் வராது. மேலும், உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை வேர்க்கடலை தடுக்கிறது.

வேர்க்கடலையில் உள்ள பாலிஃபீனால்கள் வயிறு இரைப்பை, குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. வேர்க்கடலையில் தாமிர சத்தும் அதிக அளவில் உள்ளது. இது உடலில் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கச் செய்கிறது.

இதில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளது. நம்முடைய உடல் கால்சியத்தை கிரிகித்துக்கொள்ள மக்னீசியம் துணை செய்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், கொழுப்பு வளர்சிதை மாற்றப் பணிகளை விரைவுபடுத்துகிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது.

இதில் நல்ல கொழுப்பு உள்ளதால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறைகிறது. எனவே, உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் ஊட்டச்சத்து மிக்க வேர்கடலையை எடுத்துக்கொள்ளலாம். மேலும் வாரத்துக்குக் குறைந்த அளவில் வேர்க்கடலை சாப்பிட்டு வருபவர்களுக்குப் பித்தப்பை கல் பிரச்னை வருவதற்கான வாய்ப்பை 25 சதவிகிதம் அளவுக்கு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வேர்க்கடலையில் வைட்டமின் பி12 உள்ளது. இது அல்சைமர் போன்ற மறதி நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் மூளையின் செயல்திறன் மேம்பட உதவி செய்கிறது.

மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. மூளைக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. இதன் காரணமாக மூளை செயல் திறன் மேம்படுவதுடன் நினைவாற்றலும் அதிகரிக்கிறது.

வேர்க்கடலையில் வைட்டமின் சி மற்றும் இ அதிக அளவில் உள்ளன. இவை சருமத்தில் ஏற்படும் சுருக்கம், கரும்புள்ளி போன்றவற்றைத் தவிர்த்து, சருமம் முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகிறது. ரெட் ஒயினில் உள்ள ரெட்ரால் என்ற வயோதிகத்தைத் தாமதப்படுத்தும் நுண் ஊட்டச்சத்தும் இதில் உள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.