முழங்கால்கள், முதுகுத்தண்டு மற்றும் கைகளின் வளைந்து கொடுக்கும் தன்மையை மேம்படுத்துகிறது.
வயிற்று உறுப்புகளில் சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
இந்த ஆசனம் இரண்டாவது மூன்று மாதங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கீழ் முதுகை வலுப்படுத்த நல்லது, இருப்பினும் மருத்துவரிடம் ஆலோசித்த பின்னரே ஆசனம் செய்ய முயற்சிக்கவும் மற்றும் அவர்களின் சொந்த நெகிழ்வுத்தன்மையின்(Own flexibility) அடிப்படையில் மட்டுமே திருப்ப வேண்டும்.
கார்பல் டன்னல்( Carpal Tunnel Syndrome) நோய்க்கு இவ்வாசனம் உதவும் .
இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் சுழற்சி மேம்படுத்தப்படுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கும் .
இந்த ஆசனம் சுவாச விகிதத்தை(Ratio) மேம்படுத்த உதவும்.
மற்ற Twisting ஆசனம் போல இந்த ஆசனம் , தொப்பை கொழுப்பையும் குறைக்க உதவுகிறது .
சியாட்டிகா பிரச்சனைக்கான ஆசனங்களில் இதுவும் ஒன்று.