Breaking News :

Sunday, May 19
.

காம உணர்வை தூண்டும் சாதிக்காய்


சாதிக்காய் அனைவரையும் மயக்கும் ஒரு விதமான நறுமணம் கொண்டது. அதோடு பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய மிகச் சிறந்த மணமூட்டி.

 

சாதிக்காயில் ஆண் மரம், பெண்மரம் எது என்று அறிய 6 வருடங்கழித்து அவை பூக்கும் போது தான் கண்டுபிடிக்கவே முடியும்.

 

முற்காலத்தில் நறுமண வியாபாரிகளாலும், மூலிகை வியாபாரிகளாலும் "எங்கிருந்து இந்த பொருள் கொண்டு வரப்படுகிறது" என்பதை வெளியில் சொல்லாமல் ரகசியமாய் வைத்து விற்பனை செய்யப்பட்ட வரலாறும் உண்டு...

 

ஆரம்ப காலக் கட்டத்தில் இது நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.. நாளடைவில் இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் உணரப்பட்டது... ஆனால் இதன் குணத்தை மேலோட்டமாக ஓரளவு மட்டுமே அறிந்தவர்களால் இது காமம் தூண்டக்கூடிய பொருள் என்று மட்டுமே பார்க்கப்படுகிறது...

 

இதில் உண்மை இருக்கிறது என்றாலும் கூட இதில் அதை தாண்டிய பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பி வழிகிறது...

 

சாதிக்காய் கனிக்கும் விதைக்கும் நடுவில் இருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதி தனியாக பிரிக்கப்பட்டு "சாதிபத்ரி" என்று தனியாகவும் பயன்படுத்தப்படுகிறது...

 

குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் சித்த/ஆயுர்வேத மருந்துகளில் சாதிக்காயும், சாதிபத்ரியும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது..

 

ஆண்களுக்கு காம உணர்வை தூண்டும். விந்தணு குறைபாட்டை நீக்கி விந்தணு எண்ணிக்கையை பெருக்கும். இதன் காரணமாக குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும்.

 

நினைவாற்றல் அதிகமாகும்.. சுவாசம் சீராகும். பித்தம் நீக்கும். அதோடு மட்டுமல்லாமல் நரம்பு மண்டலத்தை முழுவதுமாக சீராக்கும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் உண்டாகும் வயிற்றுப்போக்கை குணமாக்கும். காலரா போன்ற வாந்தி பேதி நோய்களுக்கு இது ஒரு அருமருந்து .

 

சாதிக்காய் "அரோமா தெரபி" என்று சொல்லக்கூடிய வாசனை சிகிச்சை முறையிலும் கூட பயன் படுத்தப்படுகிறது. இதன் வாசனை நிலையில்லாமல் அலைபாயும் மனதை அமைதிப்படுத்தும் . மன அழுத்தத்தை போக்கி நல்ல உறக்கம் வர வைக்கும். மனதில் உற்சாகம் உண்டாக்கும்..

 

சாதிக்காயில் உள்ள Myristicin என்ற சத்து அதிகம் இருப்பதால் தோல் சுருக்கத்தை (anti ageing) தடுக்கும். இதனை நம் முன்னோர்கள் அறிந்து தங்களது தோற்றப் பொலிவை காத்திருக்கிறார்கள்... மேலும் இது வாசனை திரவியங்கள், முகப்பூச்சுக்கள், பற்பசை மற்றும் வாய் கொப்புளிக்கும் தைலங்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எல்லாவற்றிலும் நம் முன்னோர்களை புறக்கணித்த நாம் இந்த விஷயத்திலும் கூட அதையே செய்து இரசாயன கலவையாக வரும் அழகுசாதன கிரீம்களை விளம்பரங்களைப் பார்த்து, மயங்கி வாங்கி உபயோகித்து... இயற்கையாகவே இருக்கும் சரும அழகையும் கெடுத்துக்கொள்கிறோம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.