Breaking News :

Sunday, May 19
.

எச்சரிக்கை! மழைக்கால நோய் வராமல் தடுக்க என்ன வழிகள்?


தொடர்ந்து பெய்யும் கனமழையல்  மழை நீர் அதிகமாக தேங்குகிறது. இதனால்  பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை,  கொசுக்களின் உற்பத்தி அதிகமாகிகிறது.

 

இந்த காலத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தியும்  பலவீனமடையும், இதனால்   காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு மற்றும் தோல் பிரச்சனைக்கான அறிகுறிகள் தெரியும். 

 

இதனை  தகுந்த நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுக்காவிட்டால் உயிரிழப்பு நேரிடும் வாய்ப்பு உள்ளது.

 

மழைக்காலத்தில் வரும் நோய்களை விரிவாக பார்ப்போம்.

 

டெங்கு காய்ச்சல்:

 

டெங்கு காய்ச்சலால்  நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர் என  நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் அறிவித்துள்ளது. 

 

2021 இல்  1,64,103 டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக  பதிவாகியுள்ளன. 

 

 காய்ச்சல், தொண்டை வலி, அதிக வியர்வை, தலைவலி, கண் வலி, குமட்டல், வாந்தி, சோர்வு, சொறி மற்றும் லோபிபி ஆகியவை  அறிகுறிகளாகும்.

 

 மேலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்புள்ளது.

 

மலேரியா காய்ச்சல்:

 

அனோபிலிஸ் என்ற கொசு கடிப்பதால் இந்த நோய்  பரவுகிறது. இதனால்  அதிக காய்ச்சல், மலேரியாவால் வயிற்று வலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, மூட்டு வலி, தசைவலி, சுரப்பிகள் வீக்கம், மலத்தில் இரத்தம், குமட்டல் ஆகியவை ஏற்படும்.

 

சில நேரத்தில்  மூளைக்குள் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.  மேலும் வலிப்பு, சிறுநீரக செயலிழப்பு, மஞ்சள் காமாலை, சுவாசக் கோளாறுகளும் வரலாம்.

 

சிக்கன்குனியா:

 

தேங்கி இருக்கும் மழை நீரால்  ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுவால் சிக்குன்குனியா வருகிறது. இந்த நோய் கொசு கடித்த 3-7 நாட்களுக்குப் பின்பு  அறிகுறிகள் தோன்றலாம். இது  காய்ச்சல், மலத்தில் வலி மற்றும் மூட்டு வலியை ஏற்படுத்தும்.

 

டைபாய்டு காய்ச்சல்

 

குப்பைகள் அதிகம் இருக்கும்  இடத்தில்  டைபாய்டு காய்ச்சல் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

 

சால்மோனெல்லா என்டெரிகா செரோவர் டைஃபி  என்ற பாக்டீரியாவால் தான்  டைபாய்டு நோய் வருகிறது.

இது காய்ச்சல், பசியின்மை, தலைவலி, இதயத்துடிப்பு  குறைவு,  வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவு, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடல்வலியை ஏற்படுத்தும்.

 

மேற்கூறிய நோய்களை வராமல் தடுக்க சில டிப்ஸ்

 

கைகளை அடிக்கடி கழுவுங்கள்.

 

வெளி உணவு அல்லது தெருக்களில் விற்கும் உணவுகளை சாப்பிட வேண்டாம்.

 

மிக முக்கியமாக சுத்தமான, வடிகட்டி, கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரைக் குடிக்கவும்.

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

 

 தும்மல் வரும்போது அல்லது இருமும்போது உங்கள் கை அல்லது கைக்குட்டையால் வாயை மூடிக்கொள்ளவும்.

 

கொசுக்களை விரட்டும் மருந்துகளை  பயன்படுத்துங்கள்.

 

சுற்றுப்புறத்தில் தண்ணீரை தேங்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

பொது இடங்களுக்கு செல்லும்போது  மாஸ்க் அணிய வேண்டும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.