Breaking News :

Sunday, May 19
.

செம்பு பாத்திரம் தரும் சுத்தமான குடிநீர்


அன்றைய தினம் வாழ்ந்த யோகிகள் மற்றும் ரிஷப்கள் கமெண்டலம் என்ற சிறிய செம்பு பாத்திரம் வைத்திருந்ததை காணலாம் அதில் நீரை ஊற்றி வைத்திருந்து சில மணி நேரங்களுக்கு பின்னரே அதனை பருகியும் வந்துள்ளனர்.

 

நமது வீடுகளில் முன்னோர்கள் பயன் படுத்திய பாத்திரங்களில் அதிகமாக தாமிர பாத்திரங்களே இருந்தது அதற்கு அடுத்தாற்போல் தண்ணீர் பிடிக்க பயன் படுத்தியது தாமிர முலாம் பூசப்பட்டவெண்கலப்பாத்திரங்கள் ஆனால் அவை இன்று எத்துனை வீடுகளில் பயன் படுத்துகிறோம் .. பயன் படுத்துவதால் மினரல் வாட்டர் செலவு மிச்சம் .

 

கேன் வாட்டர்இ மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால்இ ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும்இ அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார். இதையும் இவரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.

''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்கஇ செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுலஇ 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில் இதில் மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு. 

 

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கிறோம். எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணிஇ செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையா மாறிடுது. செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. 

 

ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க'' என்ற தகவல்களை பல அறிஞர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.