தேவையானவை:
முருங்கைக்காய் - 5 துண்டுகள்
கத்திரிக்காய் - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு உருண்டை
பெருங்காயம் - சிறிய துண்டு
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடுகு & உளுந்து - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க
தேங்காய்த்துருவல் - 1 கப்
சின்ன வெங்காயம் - 5
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 6
செய்முறை
1. தேங்காய் துருவல், மஞ்சள்தூள், சின்ன வெங்காயம் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு குழம்பு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி நறுக்கிய காய்கறிகளை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
புளியை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
3. கரைத்த புளிக்கரைசலோடு தேவையான அளவு உப்பு, பெருங்காயத்துண்டு மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
4. காய்கறிகள் நன்கு வெந்ததும், கரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
குழம்பு லேசாக கொதித்து மேலே பொங்கி வந்ததும் கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் போட்டு சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி சூடான குழம்பில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.