Breaking News :

Sunday, May 19
.

வாக்கிங் செய்தால் இவ்ளோ பிரச்னைகள் தீருமா?


1) நடைப்பயிற்சியில் 70 மடங்கு பிராணசக்தி உடலில், திசுக்களில் அதிகம் கிரகிக்கப்படுகிறது. நடக்கும்போது (ஆக்ஸிஜன்) நிமிடத்திறகு 27 லிட்டர் காற்று தேவைப்படுகிறது.

2) பிராணசக்தி அதிகரிப்பதால் இரத்தம் சுத்தம் பெறுகிறது. சுழற்சி வேகம் அதிகரிக்கிறது & அளவும் அதிகரிக்கிறது.

3) தேவையற்ற இரத்தக் கழிவுகள் வெளியேறுகிறது. வியர்வை மூலம் கொழுப்புக்கழிவுகள், உப்புகள் வெளியேற்றப்படுகிறது. உடல் துர்நாற்றம் குறைகிறது.

4) நுரையீரல், அதில் உள்ள சிற்றரை திசுக்கள், நல்ல நலம் பெறுகின்றன. சுவாசம் சீர்படுவதுடன் மேம்படுகிறது.

5) இதயத்தின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இதயத் திசுக்கள் வலிமை பெறுகின்றன.
6) பசியின்வேகம், பசித்தன்மை, தாகம் ஜீரணம் இவைகள் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.
மேம்படுத்தப்படுகிறது. தன் மயமாதல் சிறப்படைந்து எலும்பு, திசுக்களில் சேரும் சத்துக்கள் அதிகரிக்கின்றன.

7) எலும்புகள், தசைகளில் திசைவுகள் குறைந்து புதிய வலுவும், வனப்பும் பெறுகின்றன.
அதிக உடல் எடை, பருமன், சதைக் கோளங்கள் இலகுவாக, இயல்பாக, ஆபத்தில்லாமல், இணக்கமாக, எளிமையாக குறைய நடைப் பயிற்சியில் மாத்திரமே சாத்தியம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

9) அதிக தேவையில்லாத கொழுப்பை குறிப்பாக எல்.டி.எல் லிஞிலி கொலஸ்ராலை குறைத்து சீர்படுத்தி ஹச்.டி.எல். பிஞிலிஐ அதிகரித்து இதயத் திசுக்களுக்கு ஓய்வுதர துணைபுரிகிறது. நமது இரத்தத்தில் எல்.டி.எல் அளவு 100 மி.கி. மேல் இருக்கக் கூடாது.

10) நமது முதுமை, திசு அழிவு குறைந்து புதிய செல்கள் உருவாகி இளமை மேம்படுகிறது.
11) தொப்பை, தொங்கு சதை, பிதுங்கு சதைகள், இடுப்புச் சதைகள் மெதுவாக குறைய ஆரம்பிக்கின்றன. உடல் கட்டழகு அடைகிறது.

12) நீரழிவு அன்பர்களுக்கு நடைபயிற்சிதான் ஒப்பற்ற மருந்து எனலாம். எந்த அளவு சர்க்கரை நோயின் தாக்கம் உள்ளதோ அதற்கேற்ற தூரம் தினமும் நடந்திட வேண்டும்.

13) பொதுவாக அனைத்துப் பிணிகளும் நடைப்பயிற்சியால் மட்டுப்படுவதுடன் கட்டுப்படுகிறது. மருந்து மாத்திரைகளின் தேவைகளை உடனடியாகக் குறைக்கிறது.

14) நமது மெட்டாபாலிசம் அளவு சிறப்புற்று உடலில் வெப்பசக்தி (கலோரி) உற்பத்தி, பயன்பாடு மிகவும் அதிசயதக்க அளவில் கூடுகிறது.

15) கால்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கால்வலி, பாதவலி குறைந்து நரம்பு முறுக்கு, இரத்த அழுத்த தடைநீங்கி புதுசக்தியைப் பெறுகிறது.

16) தினமும் காலையில் நீர் குடித்து பின் சிறிது தூரம் நடந்தாலே எப்படிப்பட்ட கடின மலச்சிக்கலும் விலிகிவிடும். மூலநோயும் குறைய ஆரம்பிகிறது.

17) சுவாச அடைப்பை சரிசெய்கிறது. சைனஸ், ஒற்றை தலைவலி, சரியாகி நுரையீரலில் காற்று சென்று வரும் அளவை பல மடங்கு பெருக்குகிறது.

18) நடக்கும்போது பசியின்மை விலகுகிறது. உணவின் ருசி மிகுந்திடும்.

19) இரத்த அழுத்தம், மாரடைப்பு அன்பர்களும் சுகம் அடைகின்றனர்.

20) மனச்சுமை, மனஅழுத்தம், உறக்கமின்மை போன்றவற்றில் இருந்து இலகுவாக, இயல்பாக, இனியமைகா நிவாரணம் கிட்டுகிறது.

21) மனதில் ஒரு இணக்கம், இயல்புநிலை, ஆனந்தம், உற்சாகம், உத்வேகம் பீறிட்டு வரும் அற்புத சுகத்தை அறிந்திட, அனுபவிக்க நீங்களும் நடங்கள் & பிறருடன் சேர்ந்து நடங்கள். தினமும் நடங்கள். விரும்பி நடங்கள். மகிழ்ச்சியாக நடங்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.