Breaking News :

Sunday, May 19
.

செக்ஸில் திருப்தி இல்லாமைக்கு சருமப் பிரச்னை காரணமா?


உலகில் 99 சதவீத ஆண்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவது. இப்படி பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கு காரணம் சரும பிரச்சனைகள் தான். அதற்கு சரியான உடை அணியாதது மற்றும் போதிய சுகாதாரம் இல்லாதது தான் காரணம்.

குறிப்பாக பெண்களை விட ஆண்கள் தான் எப்போதும் அந்த இடத்தில் கை வைத்தவாறு இருப்பார்கள். பொது இடம் என்று கூட பார்க்காமல், அரிப்பு ஏற்பட்டால், உடனே சொரிய ஆரம்பிப்பார்கள். இந்த பிரச்சனைக்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அதற்கு முன், பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணத்தை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், அதனைத் தடுக்கும் சில இயற்கை வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்து அரிப்பைப் போக்குங்கள்.

* மன அழுத்தத்தினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தால், அது பிறப்புறுப்பில் நோய்த்தொற்றுகளின் வளர்ச்சியை அதிகரித்து, இதனால் அரிப்பை மேலும் மோசமாக்கிவிடும்.

* இறுதி மாதவிடாய் நெருங்கும் போது, ஈஸ்ட்ரோஜென் குறைய ஆரம்பித்து, இதனால் பிறப்புறுப்பின் சுவர் சுருங்கி, அவ்விடத்தில் லூப்ரிகேஷன் குறைவாக இருந்து, அதன் மூலம் அவ்விடத்தில் அரிப்புக்கள் ஏற்படும்.

* அவ்விடத்தில் உள்ள சருமம் மிகவும் வறட்சியாக எண்ணெய் பசை/ஈரப்பசை இல்லாமல் இருக்கும் போது, அது சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும்.

* பெரும்பாலும் இந்த பிரச்சனை பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். அதிலும் இது பூஞ்சையினால் ஏற்படும் ஒரு நோய்த் தொற்று ஆகும். இது பிறப்புறுப்பில் வெள்ளையாக தயிர் போன்று பரவியிருக்கும். மேலும் இது ஆன்டி-பயாடிக், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் எடுப்பது, கர்ப்பம், மாதவிடாய் காலம், காண்டம் பயன்படுத்தி இருப்பது, உடலுறவு, நீரிழிவு மற்றும் வலிமையிழந்த நோயெதிர்ப்பு மண்டம் போன்றவற்றினால் தொற்றுகள் ஏற்படுகிறது.

* கெமிக்கல் கலந்த பொருட்களான உள்ளாடையைத் துவைக்க பயன்படுத்தும் சோப்பு, நறுமணமிக்க ஸ்ப்ரே, ஆயின்மெண்ட், க்ரீம், ஜெல் போன்றவற்றை பயன்படுத்துவதாலும் நிலைமை மோசமாகும்.

* தயிரை டேம்பானில் (Tampon) நனைத்து, சில மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை பெண்கள் தங்களின் பிறப்புறுப்பினுள் விட்டு, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஈஸ்ட் தொற்று நீங்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.