காம உணர்வை கட்டுப்படுத்துவது எப்படி?
இந்த கேள்விக்கான பதிலை ஒரு ஆணின் பார்வையில் இருந்து மட்டுமே என்னால் விளக்க முடியும்.தவறாய் இருப்பின் மன்னித்து அருள்க.
திருமணம் ஆகாத ஆண்களுக்கு மிகவும் சிரமமான ஒரு விஷயம் என்னவென்றால் , எவ்வாறு தமது காம உணர்வை அடக்கி ஆழ்வது. என்னை பொறுத்தவரை , முடிந்த அளவு நான் தனிமையில் இருப்பதை விரும்ப மாட்டேன். ஏனென்றால் தனிமையே இது போன்ற எண்ணத்திற்கு முதல் நண்பன். எப்போதெல்லாம் தனிமையில் இருக்கிறோமோ, அந்த நிமிடமே இது போன்ற தவறான எண்ணங்கள் மனதில் தோன்றும்.
காலையில் இருந்து மாலை வரை அலுவலகம், பின்னர் சமையல் (பேச்சிலர் வாழ்க்கை) அதன் பின்னர் ஒரு 30–45 நிமிடங்கள் நடைபயிற்சி. ஆனால் இந்த கொரோனா காலத்தில், முதல் 5 மாதங்கள் அலுவலகம். ஃபுல் பிஸி..வேற எண்ணங்களுக்கு வேலையே இல்லை..அதன் பின்னர் பெங்களூருவில் எனது அறையில் நான் மட்டுமே.
காலையில் சரியாக லாகின் பண்ணும் நேரத்திற்கு எழுந்து மாலை வரை வேலை. அதன் பின்னர் உடனடியாக நண்பர்களின் அறைக்கு அல்லது யாரேனும் நண்பர்களை பார்க்க சென்று விடுவேன்.இரவில் அவர்களின் அறையில் தங்கி விடுவதும் உண்டு. சீக்கிரமாக வேலை முடிந்தால் அருகில் உள்ள பார்கில் நடைபயிற்சி தான்.
இருந்தாலும் சில வேளைகளில் நம்மையும் மீறி அது போன்ற எண்ணங்கள் தலை தூக்கும்.
அது போன்ற சூழலில் பின்வரும் ஏதோ ஒன்றை கையில் எடுக்க வேண்டியது தான்.
அறையை விட்டு வெளியில் வந்து மாடிப்படியில் சிறிது நேரம் அமர்ந்து இருப்பேன்.
நண்பர்கள் யாருக்காவது போன் செய்து ஒண்ணுமே இல்லாமல் ஒரு 15–20 நிமிடம் மொக்கை போடுவேன்
அலைபேசியில் உள்ள சதுரங்க ஆட்டம் ஆடுவேன்.
ஒன்றுமே முடியாத நிலையில் வேறு வழியின்றி தூங்க முயற்சி செய்வேன்.