நாட்டு வைத்தியம் டிரை பண்ணுங்க!

naatu-vaithiyam-health-tips
நாட்டு வைத்தியம் டிரை பண்ணுங்க!

வாழைத்தண்டு .....
பானை போன்ற வயிறு உள்ளவர்கள் வாழைத்தண்டு சாறு அவ்வப்போது அருந்தி வந்தால் நாளடைவில் வயிறு சுருங்கும். இந்த காலகட்டத்தில் தயிர், மோர் சாப்பிடக்கூடாது.

மல்லி .....
குழந்தைகளின் வயிற்று வலிக்கு, மல்லியை (தனியா) 4 மணி நேரம் ஊற வைத்த நீரை, ஒரு அவுன்ஸ் வீதம் கொடுத்து வந்தால் பிரச்னை தீரும்.

நெல்லிக்காய்....
நெல்லிக்காய் சாற்றில் ரோஜாப் பூவை அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்மைப்பேறு அடைய உதவும்.

பேரிக்காய் .....
இதயக்கோளாறு காரணமாக திடீர் படபடப்பு, வியர்வை ஏற்பட்டு கை, கால் உதறல் ஏற்படக்கூடியவர்கள் தொடர்ந்து பேரிக்காய் சாப்பிடுவதால் அந்த பலவீனங்கள் சரியாகும்.

வாழைப்பழம் ..
மாதவிலக்கின்போது சிலருக்கு நாள்கணக்கில் ரத்தப்போக்கு இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஏலக்காயை பொடி செய்து வாழைப் பழத்தோடு சேர்த்து... காலை மாலை என ஒன்றிரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பிரச்னை சரியாகிவிடும்.

மல்லிகைப்பூ 
கருப்பைக்கோளாறு, மாதவிலக்கு பிரச்னை உள்ளவர்களுக்கு ஓர் எளிய மருந்து... மல்லிகைப்பூவை காம்பு நீக்கி ஒரு கைப்பிடி எடுத்து 200 மில்லி தண்ணீர் விட்டு 100 மில்லியாக்கி இறக்கி வடிகட்டவும். இதை வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் காலை, மாலை என 7 நாள் குடித்து வந்தால் பிரச்னைகள் தீரும்.

வில்வ இலை ..
வில்வ இலை, நல்லெண்ணெய், மிளகு சேர்த்து காய்ச்சிய எண்ணெயை தலையில் தடவி குளித்து வந்தால் ஜலதோஷம், இருமல் வராமல் தடுக்கலாம்.

மூக்கிரட்டை வேர் ..
மூக்கிரட்டை வேரை கஷாயம் செய்து குடித்து வந்தால்... மூட்டு எலும்புகளில் வரக்கூடிய வாதம் மற்றும் தொப்பை.ரத்த சோகை சரியாகும்