காலை எழுந்ததுமே குடிக்க வேண்டிவை?
காலையில் எழுந்ததுமே சாப்பிடக்கூடிய உணவுகள்தான் நம் ஒட்டுமொத்தமான ஆரோக்கியத்திற்குமே காரணமாக அமையும். காலை எழுந்ததுமே டீ, காபி குடிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. காலையில் ஆரோக்கியமான உணவாக நம் உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, உடலுக்கு எனர்ஜி கொடுக்கக்கூடிய உணவுகள் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. Honey with warm water:
காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்துக் குடிப்பது மிகவும் நல்லது. தேனில் இருக்கும் வைட்டமின், மினரல், என்சைம்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், வயிற்றில் உள்ள தேவையில்லாத கழிவுகளான Toxins ஐ வெளியேற்றும். 20 கிராம் தேனில் 8.4 கிராம் Fructose மற்றும் 6.9 கிராம் Glucose இருப்பதால் காலையில் உடலுக்குத் தேவையான சக்தி மற்றும் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலில் அதிகரிக்கிறது.
2. Soaked Almonds:
பாதாமில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற நல்ல கொழுப்புகளும் இருக்கின்றன. எனவே, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட உகந்த உணவு பாதாம். 100 கிராம் பாதாமில் 21 கிராம் புரதம் இருக்கிறது. இது வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். ஊற வைத்த பாதாமின் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டியது அவசியம். பாதாமின் தோலில் இருக்கும் Tannin என்னும் மூலப்பொருள் பாதாமின் சத்துக்கள் உடலில் போய் சேருவதைத் தடுக்கிறது. எனவே, கட்டாயம் ஊற வைத்த பாதாமின் தோலை நீக்கிவிட்டே சாப்பிட வேண்டும்.
3. Papaya:
பழங்களிலே காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்தது பப்பாளி பழமாகும். குடல் இயக்கத்தை சீராக்கவும், உடலில் உள்ள கழிவுகளை நீக்கவும். வயிறு உப்புசம், மலச்சிக்கல் வராமலும் தடுக்கிறது. மேலும், இதில் அதிகமாக இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
4. Watermelon:
தர்பூசணியில் 90 சதவீதம் நீர்ச்சத்தும், அதிக அளவில் Electrolytes உள்ளது. இது கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர் வறட்சியிலிருந்து தடுக்கும். இது உடலுக்கு நல்ல எனர்ஜியையும் கொடுக்கிறது.
5. Sprouted green gram:
பச்சைப்பயறை அப்படியே சாப்பிடுவதை விட. முளைவிட்ட பிறகு அதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகமாகும். பச்சைப்பயறில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதிலிருக்கும் புரதம் சீரான தசை வளர்ச்சிக்கும், செல்கள் சேதமடையாமலும் பாதுகாப்பதால், ஆரோக்கியமான உடலமைப்பை பெறுவதற்கு உதவுகிறது. எனவே, காலையில் இனி டீ, காபி எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டு இந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். முயற்சித்துப் பாருங்களேன்.
ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரைமணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். அதாவது காலையில் எழுந்ததும் பல் துலக்கியதும் குறைந்தது ஒரு லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். சிலர் வெந்நீர் அருந்துவார்கள். ஆனால் குளிர்ந்த நீர் குடிப்பதுதான் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியை குறைக்கும் தன்மை வெந்நீரை காட்டிலும் அதிகம். தண்ணீர் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு, போன்ற நோய்கள் கட்டுக்குள் இருக்கும். உடலில் உள்ள அமிலத்தின் தீவிரத் தன்மை குறையும். முக்கால் லிட்டர் நீரை முழுமையாக குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராக பிரித்து குடிக்கலாம்.
இஞ்சி:
இஞ்சியில் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. அதனால் எப்போது இஞ்சியைப் பயன்படுத்தினாலும் தோல் நீக்கிவிட்டு தான் பயன்படுத்த வேண்டும். இஞ்சி தோலை நீக்கிவிட்டு சாறு எடுத்து அதோடு தேன் கலந்து குடித்து வந்தால் தேவையில்லாத கொழுப்பை குறையும். வீசிங், ஆஸ்துமா போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்சினை உள்ளவர்களுக்கு அருமருந்து இஞ்சி. ஆனால் வாய்ப்புண், வயிற்றிப்புண் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. அல்லது மிகக் குறைவான அளவில் தினமும் எடுத்துக் கொள்ளாமல், வாரத்தில் ஒரு நாள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் உடலில் கார்போஹைட்ரேட்டின் அளவை சமன்படுத்தும்.
அருகம்புல்:
அல்சருக்கு அருமருந்து அருகம்புல் சாறுதான். அதேபோல அருகம்புல்லை டாக்சின்களை வெளியேற்றவும் பயன்படுத்தலாம். அருகம்புல்லின் இலைப் பகுதியை விட, அதனுடைய தண்டு மட்டும்தான் மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. இந்த இலையின் ஓரங்களில் காணப்படும் வெண்மையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால் சிலருக்கு வயிற்று போக்கை ஏற்படுத்திக் கூடிய வாய்ப்பு உள்ளது. அதுபோன்ற அலர்ஜி பண்புகள் உள்ளவர்கள் அருகம்புல்லைத் தவிர்ப்பது நல்லது. அல்லது வெளியில் கிடைக்கும் ரெடிமேட் பொடிகளை வாங்காமல், வீட்டிலேயே ஒரு தொட்டியில் அருகம்புல்லை வளர்த்து அதைப் பயன்படுத்தலாம். மேலும் அரைத்து சாறு எடுத்து வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.
வெந்தயம்:
சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வெந்தயம் மிகச் சிறந்த மருந்து. உடல் சூட்டை தணித்துக் குளிர்ச்சியாக்கும். வெந்தயத்தை முதல் நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து, மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வெந்தயத்தை ஊற வைக்காமல் அப்படியே தண்ணீருடனோ அல்லது மோருடனோ சாப்பிடுவது கூடாது. சிலர் வெந்தயத்தை அப்படியே வாயில் போட்டு விழுங்குவார்கள். அப்படி செய்யக்கூடாது.
வெந்தயத்தை ஊற வைக்காமல் சாப்பிட்டால் அதன் மேல் உள்ள உறை செரிமானத்தை தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். வெந்தயம், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் உடனடியாக சளி பிடிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. சில நேரங்களில் வயிற்று போக்கிற்கும் வழிவகுத்துவிடும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை ஒரு நாளைக்கு முன்னதாகவே ஊற வைத்துவிடுங்கள். பிள் வெந்தயத்தை முளைகட்டி விட வேண்டும். சிறிதாக முறைகட்டினால் போதாது. ஒரு இன்ஞ் அளவுக்கு முளைகட்ட வைக்க வேண்டும். அந்த ஒரு இன்ச் அளவு முளைகட்டியது தான் சர்க்கரை நோயை குணமாக்கும். இப்படி சாப்பிடும் பொழுது, வெந்தயத்தில் இருக்கும் கசப்புத் தன்மையும் கூட இருக்காது. அதனால் தாராளமாக உங்களால் சாப்பிட முடியும்.
நெல்லிக்காய் சாறு:
காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு கரைவதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புகின்றவர்களுக்கு வெந்நரில் எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் இதுபோன்ற வேறு எந்த பானத்தையும் விட, நெல்லிக்காய் சாறு மிகச்சிறந்த பலனைக் கொடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். அதனால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ, காபிக்கு பதிலாக நெல்லிக்காய் சாறு குடியுங்கள்.