காமத்தை கட்டுக்குள் வைக்க என்ன?
28 வயது தான் என்றால், திருமணமாகி ஓரிரு வருடங்கள் தான் ஆகியிருக்கும்.. அடக் கடவுளே, இந்தக் காலகட்டத்தில் 35 வயதிற்கு மேலும் திருமணம் ஆகாமல் சுற்றுபவர்களுக்கு இடையில் 28 வயதில் ஏற்கனவே திருமணமாகி உங்களுக்கு ஒரு மனைவி இருக்கிறார் என்றால், எப்பேர்ப்பட்ட வரத்தை வாங்கி வந்திருக்கிறீர்கள் நீங்கள். அதை முறையாக அனுபவிக்கத் தெரியாத ஆளாக இருக்கிறீரே.
இந்த வயதில் உள்ளம் மற்றும் உடலின் தேவைகளுக்கு ஈடுகொடுக்க ஒரு துணை அமைவது எப்பேர்ப்பட்ட கொடுப்பினை, இரண்டு மாதமாகச் சண்டை என்றால் நீங்களாகச் சமாதானம் செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லையா?.
என்ன சண்டையாக இருந்தாலும் அதைச் சரி செய்ய வேண்டியது தானே ஒரு குடும்பஸ்தனின் முதல் கடமை. ஒருவேளை சாதாரணமாக உங்களுக்கு இந்த வரம் கிடைத்து விட்டதால் அதன் அருமை புரியாமல் இருக்கிறீரோ?..
ஊடலின் வெம்மையைத் தனிப்பதே அதற்குப் பின்னர் ஏற்படும் கூடல் தான்.. சண்டையிட்டு சில நாள் பேசாமல் இருந்து பிறகு மனைவியிடம் கெஞ்சி அதற்கு மேல் கொஞ்சி தாம்பத்தியத்தில் இன்பம் காண்பதெல்லாம் வேறு லெவல் போதை சாரே.
'விட்டுக் கொடுப்பவன் கெட்டு போவதில்லை' என்ற பழமொழி பகைக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல. குடும்ப வாழ்க்கைக்கும் சேர்த்து தான்.. புரிந்து கொண்டவர் பிஸ்தா. மனைவியுடனான மோதலை சரி செய்யாமல் இரண்டு மாதங்கள் இல்லற வாழ்க்கையை வீணடித்து விட்டீர்களே.
ஈன்ற தாயிடமும், நம்பி வாழ வந்த துணைவியிடமும் தன்மானம் பார்ப்பவர் வாழ்க்கை சீர்கெட்டு விடும் சகோ.. முதல் வேலையாக மனைவியைச் சமாதானப்படுத்துங்கள்.. இந்தக் கேள்வியை இங்கே பொதுவெளியில் கேட்டதைப் போல உங்கள் நண்பர்களிடம் உளறிக் கொண்டிருக்காதீர்கள்.. எந்தப் புத்தில் எந்தப் பாம்போ, எவனெவன் புத்தி எப்படியோ யாருக்குத் தெரியும்.
இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்படும் போது இரண்டு குடும்பத்தின் பெரியவர்கள் வேண்டுமானால் மூக்கை நுழைக்கலாம், மற்ற எவனையும் (ஆம்) ஒருமையில் தான் சொன்னேன், எவனையும் உங்கள் இருவருக்கிமிடையில் உள்ள அந்நியோன்யத்தில் மூக்கை நுழைக்க விடாதீர்கள். பாவிப் பயல்கள், பெரும்பாலும் அடுத்தவர் மனைவியைச் சிஸ்டர் என்று அழைப்பதெல்லாம் வெறும் ஒப்புக்கு தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
உங்கள் மனைவியுடனான ஊடலை சரி செய்யாமல் விட்டது தவறு என்று சொல்லியாகி விட்டது. அடுத்தது காமத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, ஏதேனும் வழி உள்ளதா என்றால், ஆம் இரண்டு வழி உள்ளது.
மொத்தமாகக் கால் கிலோ அரளி விதையை அரைத்து குடித்து உடலை விட்டு உயிரை நீக்கி காமத்தை சுத்தமாக Off செய்யலாம் அல்லது எட்டிக்காயை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சிறிதாக மென்று தின்றீர்களானால் சிறிது காலத்தில் ஆண்மை போய்விடும், அதன் பிறகு எப்பேர்ப்பட்ட பேரழகியை பார்த்தாலும் உங்களுக்கு ஒன்றும் தோன்றாது.