அழகான கண்களுக்கு நந்தியாவட்டை பூ!

nanthiyavattai-flower-health-tips
அழகான கண்களுக்கு நந்தியாவட்டை பூ!

1. இரவில் நான்கு முதல் ஐந்து பூக்களை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.இதனை ‘ஊறல் குடிநீர்’ என்றும் அழைப்பர். இந்த நீரினை கண்கள் கழுவ பயன்படுத்தலாம்.
2. இந்த பூக்களை நன்கு கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அதனை ஒரு சொட்டு கண்களில் விட்டு கழுவலாம்.

3. இளம் பூவினை எடுத்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து ஒரு ஒரு சொட்டு இரு கண்களுக்கும் விடலாம்.

4. நல்லெண்ணெய் மற்றும் 10 பூக்களை இளஞ்சூட்டில் வைத்து சூடு படுத்தி வைத்துக் கொண்டால் ஒரு ஒரு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறையும் கண்களில் இட்டு ஐந்து நிமிடம் ஓய்வெடுத்தால் கணினி மற்றும் கைபேசி பார்ப்பவர்களின் கண்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.
5. ஐந்து பூக்களை எடுத்து இரு கண்களின் மேலும் வைத்து ஒரு துணியினால் கட்டி ஐந்து நிமிடம் கழித்து அவிழ்த்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியினை தரும்.

6. இது நம் கண்களுக்கு ஏற்ற மிக அருமருந்து ஆகும்.

நந்தியாவட்டை செடிகள் மூன்று வகைகளில் உண்டு. புதர்ச்செடியாகவோ, குறுஞ்செடியாகவோ வளரும். கரும்பச்சை நிறத்தில் இருக்கும் இதன் இலைகள் மற்றும் பூக்களை கொண்டு இதை வகைபடுத்துவார்கள். ஓரிதழ், ஈரிதழ், மூவிதழ் என அடுக்குகள் மூலம் இது வகைப்படுத்தப்படுகிறது. மூன்றுமே மருத்துவ குணங்களை ஒத்திருக்க கூடியது தான்.

ஓரிதழ் நந்தியாவட்டை என்பது ஒற்றை அடுக்கு மலரானது. ஐந்து இதழ்களை கொண்டிருக்கும். கொத்து கொத்தாக மலரும். இலைகள் நீளவட்டமாக இருக்கும். செடி போன்று இருக்கும் எனினும் இவை நீர்ச்சத்து மிக்க வளமான பூமியில் பற்றி படரும் போது குறுமரமாக வளர்ந்துவிடும்.

இதை கோவில்களில் அதிகம் பார்க்கலாம். நீர்ச்சத்து இருக்கும் நிலப்பகுதிகளிலும் இவற்றின் வளர்ச்சியும் வளமாக இருக்கும். இரண்டடுக்குகளை கொண்டிருக்கும் இந்த மலரோடு இலை, பட்டை, வேர் அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கும். மூன்றடுக்கு என்பவற்றின் இலையின் நிறம் அடர்ந்த பச்சை நிறத்தில் இருக்கும். ஆண்டு முழுவதும் இந்த பூக்கள் மலரும்.

நந்தியாவட்டை பூக்கள் மற்றும் இலையிலிருந்து வரும் பால் இரண்டுமே மருத்துவ பயன் நிறைந்தவை. இதனுடைய வேர் கசப்பு மற்றும் துவர்ப்புச்சுவையும் கொண்டிருக்கும். உடலில் இருக்கும் சூட்டை கிளப்பி பிறகு சீராக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் நந்தியாவட்டை பயன்படுத்தப்படுகிறது.