காய்ச்சல் வந்தவுடன் என்ன செய்வது?
நன்றாக இருக்கும் ஒருவர்க்கு தலைவலி ,கால்வலி என ஒருமணி நேரத்தில் காய்ச்சல் வந்துவிடுகிறது.
காய்ச்சல் வந்த முதல் நாள் அல்லது இரண்டாம் நாள் என ஏதாவது ஒருநாளில் மட்டும் உண்ணாநோன்பு மிக முக்கியம்..காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தண்ணீர் என எதுவும் சாப்பிட கூடாது,,தாகம் அதிகமானால் சிறிது தண்ணீர் குடிக்கலாம்,,ஒய்வுடன் பட்டினியை கடைபிடித்தால் காய்ச்சல் தீவிர நிலைக்கு போகாமல் சமாளிக்கலாம்...
12 மணி நேர பட்டினிக்கு பிறகு சூடான சோறு அல்லது புளிக்காத மாவு இட்லி தொட்டுகொள்வற்க்கு புதினா கொத்தமல்லி கலந்த சட்டினி மட்டுமே .,,.
முதல் இரண்டு நாளில் பட்டினி வைத்தியம் பலன் தரும் மூன்றாவது நாளில் பட்டினி வைத்தியம் பலன் தராது..
பப்பாளி இலை சாறு 20ml தேன் கலந்து காலை இரவு என மூன்று நாட்கள் சாப்பிடலாம்..
முதல் மூன்று நாட்கள் ஒய்வும்(செல்போன் டீவி கூடாது), பத்திய உணவும் அவசியம்..(ரசம் சோறு கஞ்சி இட்லி)
மூன்று நாட்கள் கழித்து காய்ச்சல் சளியாக மாறுவிடும் ,,சளி இருக்கும் சமயத்தில்
கற்பூரவள்ளி இலை 4
துளசி இலை 10
வெற்றிலை 1
இது மூன்றையும் கசக்கி போட்டு ஒரு டம்ளர் நீரை அரை டம்ளராக சுண்ட காய்ச்சி காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து இரண்டு நாட்கள் சாப்பிடவும்..இந்த மூலிகை கசாயம் சாப்பிட்ட 5 மணி நேரம் கழித்து சளி அனைத்தும் மலமாக வெளியேறும்....
காய்ச்சல் சளி என 5 நாளில் இவை சரியானவுடன் சைவம் சாப்பிடுபவர்கள் காய்கறி மற்றும் தக்காளி சூப் சத்தான சைவ உணவுகளும்
அசைவம் சாப்பிடுபவர்கள் நெத்திலி மீன் குழம்பு ஆட்டுகால் சூப் ஈரல் என சாப்பிட்டு உடலை பலபடுத்தவும்...