பால் பணியாரம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
½ கப் பச்சரிசி ½ கப் ஊளுந்த பருப்பு பொரிக்க எண்ணெய் தேவையான அளவு 1 கப் தேங்காய் பால் ¼ கப் காய்ச்சிய பால் சர்க்கரை தேவையான அளவு 1 கப் ஏலக்காய் தூள் 1 சிட்டிகை உப்பு
செய்முறை
முதலில் நாம் எடுத்து கொண்ட பச்சரிசியையும், உளுந்தையும் இரண்டு மூன்று முறை அலசி பின் இரண்டையும் தனிதனியாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூன்று மணி நேரங்கள் ஊற வைத்து கொள்ளுங்கள்.
பின் முதலில் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் பச்சரியை சேர்த்து மையாக அரைக்கவும் பின் மாவை தோன்டி எடுத்து பின் உளுந்தை சேர்த்து அரைத்து பின் இரண்டையும் ஒன்றாக சேர்த்து கெட்டியாக அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பின் எண்ணெய் காய்ந்ததும், பின் நாம் அரைத்த மாவில் சிறிய நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து எண்ணெயில் சேர்த்து, பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
பின்பு ஒரு பவுளில் தேங்காய்ப்பால், காய்ச்சிய பால், ஏலக்காய்த்தூள் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும். பின் பொரித்தெடுத்து பனியாரத்தை இதனுடன் சேர்த்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். அவ்வளவு தான் சுவையான பால் பனியாரம் தயார்....