மொச்சை முருங்கைக்காய் தீயல் குழம்பு செய்வது எப்படி?
தேவையானவை:
மொச்சை - 150 கிராம்
முருங்கைக்காய் - 1
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 15
தேங்காய் துருவல் - அரை மூடி
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/12 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
கடுகு, வெந்தயம் தாளிப்பதற்கு - சிறிதளவு
நல்லெண்ணெய் - 6 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மொச்சையை எட்டு மணி நேரம் ஊறவைத்து இரண்டு டம்ளர் தண்ணீர், கால்பூன் உப்பு போட்டு குக்கரில் நான்கு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை மிதமான தீ வைத்து நன்கு வறுக்க வேண்டும்.
ஓரளவு தேங்காய் வறுபட்டவுடன் மிளகு, சீரகம், 5 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பிரவுன் கலர் ஆகும் வரை வறுக்க வேண்டும்.
பின்பு அதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கொஞ்சமாக கருவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வறுத்து குளிர வைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து 10 சின்ன வெங்காயம்,முருங்கைக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கியவுடன் புளியை கரைத்து ஊற்ற வேண்டும்.
பின்பு அதனுடன் அரைத்த மசாலா விழுந்து சேர்த்து கலந்து விட வேண்டும்.
இதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர் குழம்பிற்கு தேவையான உப்பு, வேக வைத்த மொச்சை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
குழம்பு கொதித்து கெட்டியானவுடன் இறக்கினால் மிகவும் சுவையான மொச்சை முருங்கைக்காய் ரெடி.