10 வகையான சட்னிகள் செய்வது எப்படி?
வெங்காய கார சட்னி
தேவையான பொருள்கள்
சின்ன வெங்காயம் – கால் கிலோ
காய்ந்த மிளகாய் – 10
பூண்டு – 2 பல்,
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
புளி – சிறிதளவு
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 5 இலை
பெருங்காயம் – அரைத் தேக்கரண்டி
செய்முறை
வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
மற்ற அனைத்து தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயத்தினை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தினை சிறிது நேரம் ஆற வைக்கவும்
அதன் பிறகு மிக்ஸியில் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து அதில் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
இதனை அரைத்து வைத்துள்ள வெங்காயத்துடன் சேர்த்து கிளறி விடவும்.சுவையான வெங்காய கார சட்னி ரெடி.இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
நெல்லிக்காய் சட்னி
தேவையான பொருள்கள்
பெரிய நெல்லிக்காய் - 4
மிளகாய் வற்றல் - 5
உளுந்து - 6 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது [விரும்பினால்]
செய்முறை
நெல்லிக்காயை விதை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.இட்லி பாத்திரத்தில் விதை நீக்கின நெல்லிக்காயை வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, மிளகாய் வற்றல், விரும்பினால் சிறிது கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுக்கவும்
மிக்ஸியில் வறுத்தவற்றை போட்டு சிறிது தேங்காய், புளி, உப்பு, நெல்லிக்காய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியான சட்னியாக அரைத்து எடுக்கவும்.
சுவையான நெல்லிக்காய் சட்னி தயார். இதை இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.
விரும்பினால் தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் துவையலாகவும் சாப்பிடலாம்.
வேர்க்கடலை சட்னி
தேவையான பொருள்கள்
வேர்க்கடலை - அரை கப்
வெங்காயம் - பாதி
காய்ந்த மிளகாய் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
கடுகு, கறிவேப்பிலை
எண்ணெய் - தாளிக்க
செய்முறை
வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.இப்போது எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.வேர்க்கடலை சட்னி தயார்.
இது இட்லி மற்றும் தோசைக்கு நல்ல காம்பினஷன். இது நல்ல சத்தானதும்.
புதினா மல்லி சட்னி
தேவையான பொருள்கள்
வெங்காயம் - 2
தக்காளி - 2
தேங்காய் துருவியது - கால் கப்
கொத்தமல்லி - கால் கட்டு
புதினா - கால் கட்டு
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க
செய்முறை
புதினா மற்றும் மல்லி தழைகளை சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும்
தேவையான பொருட்கள் அனைத்தையும் வாணலியில் போட்டு நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் ஆற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
புதினா மல்லி சட்னி தயார். இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.
வெங்காயம் தக்காளி சட்னி
தேவையான பொருள்கள்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 3
மிளகாய் தூள் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைகேற்ப
தாளிக்க
கடுகு - சிறிது
உளுந்து - சிறிது
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - தாளிக்க
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கொதிக்கும் நீரில் தக்காளியை போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும்.
தக்காளியை தோல் உரித்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிந்தவுடன் உளுந்து போட்டு வறுக்கவும், பிறகு சிறிது பெருங்காயம் போடவும்
பிறகு பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.
அதனுடன் தக்காளி கரைசலை ஊற்றி மிளகாய் தூள், மஞ்சள் தூள், மீதி உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.பொடியாக நறுக்கின கொத்தமல்லி சேர்த்தால் சுவையான சட்னி தயார்.
5- வகையான சட்னி
கொள்ளு சட்னி
தேவையான பொருட்கள்
கொள்ளு – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 1
பூண்டு – 6 பல்லு
சீரகம் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
புளி - சிறிது
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கொள்ளு, நறுக்கிய தக்காளி இரண்டையும் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், சீரகம், தனியா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* வெங்காயம் வதங்கியவுடன் வேகவைத்த கொள்ளு, தக்காளியுடன் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.
* பின்னர் இதனுடன் ஊற வைத்த புளி, உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.இப்போது சுவையான கொள்ளு சட்னி தயார்.
* குறிப்பு : சட்னி அரைக்கும் போது கொள்ளு வேக வைத்த நீரை பயன்படுத்தவும்.
* அரைக்கும் போது 5 நறுக்கிய சின்ன வெங்காயத்தை பச்சையாக சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும்.
பொட்டுக்கடலை சட்னி
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
மிளகாய் வத்தல் - 2
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டுப்பல் - 2
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள் :-
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் வெட்டி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், மிளகாய் வத்தல் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.
கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். இப்போது சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.
நிலக்கடலை சட்னி
தேவையான பொருட்கள்
நிலக்கடலை -- ஒரு கையளவு (வறுத்து தோல் நீக்கியது)
சிவப்பு மிளகாய் வத்தல் -- 5
புளி -- 1/2 கோலி அளவு
தேங்காய் துருவல் -- 5 டீஸ்பூன்
உப்பு -- 2 சிட்டிகை
தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு -- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -- சிறிதளவு
சிறிய வெங்காயம் -- 1 கப் (பொடிதாக நறுக்கியது)
செய்முறை
முதலில் கடாயில் புளி,வத்தல்,தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
மிளகாயின் வாசம் வந்தவுடன் நிறுத்தி சூடு ஆறிய பின் நிலக்கடலைபருப்பை சேர்த்து கலவையை அரைக்கவும்.
பின் கடாயில் 4 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின் அரைத்த கலவையை ஊற்றி உப்பு போடவும்.நன்கு கலக்கி 5 நிமிடம் கொதிக்கவிடவும்.இப்போது சுவையான
நிலக்கடலை சட்னி தயார்.
உளுத்தம் பருப்பு சட்னி
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 1/4 ஆழாக்கு
தேங்காய் துருவல் – 4 ஸ்பூன்
பெ.வெங்காயம் – 1
வற்றல் மிளகாய் – 4
உப்பு – 1 ஸ்பூன்
புளி – சிறிதளவு
செய்முறை
முதலில் நல்லெண்ணெய் 1 கரண்டி விட்டு மிளகாயை வறுத்துக் கொண்டு பின் வெங்காயத்தை வதக்கி எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
பின் உப்பு, புளி, தேங்காய் வைத்து மிளகாய் வெங்காயம் சேர்த்து அரைத்து சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கடுகு 1/4 ஸ்பூன், பெருங்காயம் சிறு துண்டு, கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.இப்போது சுவையான உளுத்தம் பருப்பு சட்னி தயார்.
எள் சட்னி
தேவையான பொருட்கள்
வெள்ளை எள் - கால் கப்,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
பூண்டு - ஒரு பல்,
புளி - கோலி அளவு,
காய்ந்த மிளகாய் - 6,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை
முதலில் எள்ளை சுத்தம் செய்து, வெறும் கடாயில் நன்கு வறுக்கவும்.
சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, தேங்காய் துருவல், பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து, எள்ளுடன் சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.இப்போது சுவையான எள் சட்னி தயார்.