வரகு அரிசி உப்புமா செய்வது எப்படி?

varagu-arisi-uppuma-recipe
வரகு அரிசி உப்புமா செய்வது எப்படி?

தேவையானவை:
வரகு அரிசி (கழுவி சுத்தம் செய்து வறுத்தது) - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் 1
காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், குடமிளகாய், பட்டாணி) - முக்கால் கப்
கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை
மிளகாய் - 2

எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -அரை டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
உப்பு, எலுமிச்சைச் சாறு - ஒன்றரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை -2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - ஒன்றரை கப்

செய்முறை:
வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உபருப்பு, ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் காய்கறிக் கலவை, கொஞ்சமாக உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடங்களுக்கு வதக்கவும். தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் கொதித்ததும் வரகு அரிசியைச் சேர்த்துக் கிளறவும்.

நன்றாகக் கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேகவிடவும். இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். கொத்துமல்லித் தழை தூவி, சூடாகப் பரிமாறவும். உப்புமாவே வேண்டாம் என்கிறவர்கள்கூட இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.