எலுமிச்சை சாதம் செய்வது எப்படி?
தேவையானவை:
பொருள் - அளவு
உதிராக வடித்த சாதம்2 கப்
எலுமிச்சை பழம்2
உப்பு தேவைக்கேற்ப
பச்சை மிளகாய்2 (பொடியாக அரிந்தது)
வறுத்தரைத்த வெந்தயப்பொடி 1 சிட்டிகை
மஞ்சள்தூள்அரை டீஸ்பூன்
இஞ்சி1 டீஸ்பூன் (பொடியாக அரிந்தது)
வறுத்து தோல் நீக்கிய வேர்கடலைகால் கப்
தாளிக்க
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
எலுமிச்சம் பழத்தை பிழிந்து விதை இல்லாமல் சாறு எடுத்துக்கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, இவற்றுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்புகளை தாளித்து, இஞ்சி, பச்சைமிளகாய், சிரகம், கறிவேப்பிலை, வேர்கடலை சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
இவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அதிக நேரம் கொதிக்கவிடாமல் எலுமிச்சைக் கலவையை இறக்கவும்.
எலுமிச்சைக்கலவை ஆறியவுடன், உதிராக வடித்த சாதத்தை கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இவற்றுடன் வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி சேர்த்து கலந்தால் சுவையான, வாசனையான எலுமிச்சை சாதம் ரெடி.