சீடை செய்வது எப்படி?

seedai-food-cooking-tips
சீடை செய்வது எப்படி?

தேவையானவை:

இட்லி அரிசி (புழுங்கல்) - ஒரு கிலோ
உளுத்தம் பருப்பு - 125 கிராம்
பயத்தம் பருப்பு - 125 கிராம்
உப்பு - தேவைக்கு
தேங்காய் - 2
நெய் அல்லது டால்டா - 4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை
அரிசியை கழுவி விட்டு 3 மணிநேரம் ஊற வைத்து கிரைண்டரில் போட்டு உப்பு சேர்த்து கெட்டியாகவும் நைசாகவும் அரைக்கவும்.

பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவும்.

தேங்காயை சன்னமாக துருவி நன்கு ஈரப்பதம் போக வதக்கி வைத்துக் கொள்ளவும்.

வறுத்து வைத்திருக்கும் பருப்பு வகையை மிக்ஸியில் போட்டு பொடித்து மா சல்லடையில் சலித்து எடுக்கவும். (கப்பி இல்லாமல் இருக்க வேண்டும் இல்லையெனில் சீடை வெடிக்கும்).

ஒரு பாத்திரத்தில அரைத்த மாவில் நெய் கலந்து அடுப்பில் வைத்து சிறிது வாட்டிக் கொள்ளவும் (இப்படி செய்வதால் ஈரத்தன்மை நீங்கிவிடும்)
வாட்டிய மாவோடு வதக்கிய தேங்காய் துருவல், பயத்தம்மாவு உளுத்தம்மாவு சேர்த்து நன்கு ஒன்று சேர பிசையவும்.

பிசைந்த மாவை எடுத்து சிறு சிறு உருண்டையாக உருட்டி ஒரு வெள்ளை துணியில் போட்டு உலர்த்தவும். உருண்டையை அழுத்தியோ அல்லது நன்கு உருண்டையாக வரணும் என்றோ உருட்டக்கூடாது லேசாக ஒரு உருட்டு அப்படி உருட்டணும் அழுத்தி வட்டமாக இருக்கணும் என்று உருட்டினால் சீடை வெடிக்கும்.

சீடை நன்கு உலர்ந்ததும் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீடையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான சீடை தயார்.

சீடையை அழுந்த உருட்டக்கூடாது சும்மா லேசாக உருட்ட வேண்டும் இல்லையென்றால் வெடிக்கும் அப்புறம் ஹெல்மெட் போட்டுக்கிட்டுதான் வறுக்கணும்.