காஞ்சிபுரம் இட்லி எப்படிச் செய்வது?

kanchipuram-idly-tiffun-cooking-tips
காஞ்சிபுரம் இட்லி எப்படிச் செய்வது?

 தேவையானவை:
பச்சரிசி - 750 கிராம்
தோல் நீக்கிய உளுந்து - 500 கிராம்
வெந்தயம் - 100 கிராம்
மிளகு - 100 கிராம்
சீரகம் - 100 கிராம்
சுக்கு - 50 கிராம்
நெய் - 400 கிராம்
தயிர் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

முதலில் பச்சரிசி, தோல் நீக்கிய உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறிய பிறகு, அத்துடன் தயிர் சேர்த்து கொரகொரப்பாக மாவை அரைக்க வேண்டும். பிறகு அரைத்த மாவுடன் மிளகு, சீரகம், சுக்கு, தேவையான அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து ஆறிலிருந்து ஏழு மணி நேரம் புளிக்கவைக்கவும்.

பிறகு மந்தாரை இலை அல்லது வாழையிலையை மூங்கில் குடலையில் இட்டு அதில் ஊற்றிக்கொள்ள வேண்டும். கோவிலில் தயாரிக்கப்பட்டும் இட்லி வேக, இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் எடுக்கும். எவ்வளவு வேக வைக்கிறோமோ அவ்வளவு பக்குவமாக இருக்கும். வீட்டில் இட்லி பாத்திரத்தில் குறைந்தது அரை மணிநேரமாவது வேகவைக்க வேண்டும்.  இட்லி வெந்ததும் அரை மணி நேரம் கழித்து ஆறவைத்துக் கவிழ்த்தால் காஞ்சிபுரம் இட்லி தயார்.  

ஒரிஜினல் காஞ்சிபுரம் இட்லி போலவே சாப்பிட, வாழை இலையை கட்டமாக வெட்டி அதை நெருப்பில் லேசாக வாட்டி எடுக்க வேண்டும்.

பின்பு அந்த இலையை டம்ளரில் வைத்து, அதன் உள்ளே இட்லி மாவை ஊற்றி இட்லி குக்கரில் வேக வைத்து எடுத்தால் சூப்பரான பாரம்பரிய காஞ்சிபுரம் இட்லி தயார்.

காலை உணவை வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் உங்கள் வீட்டில் இந்த காஞ்சிபுரம் இட்லியை செய்து பாருங்கள். பிறகு அடிக்கடி செய்வது உறுதி.