நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி?

nattu-kozhi-chicken-kulambu
நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை

நாட்டுக்கோழி 1 – கிலோ
வெங்காயம் – 3
தக்காளி – 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் 3-4
மல்லி (தனியா) – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் ½ டேபிள் ஸ்பூன்
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 3 பல்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையாள அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
தண்ணீர் – சிறிதளவு

முதலில் நாட்டுக்கோழி குழம்பு (chicken kulambu) செய்ய கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையும் பொடிதாக நறுக்கி கொள்ளவும்.

நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

மல்லி, சீரகம், தேங்காய் மற்றும் பூண்டு ஆகியவற்றை கடாயில் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளவும் வதக்கியவை ஆறியதும் மிக்சியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

பின்பு அவற்றில் இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.

அதன் பிறகு தக்காளியை வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்த பேஸ்ட், கரம் மசாலா, உப்பு மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.

அதன் பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை மசாலா சிக்கனில் படும்மாறு நன்றாக பிரட்டி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 20 நிமிடம் வரை சிக்கனை வேகவைக்க வேண்டும்.

சிக்கன் நன்றாக வெந்ததும் இறக்கி குழம்பின் (chicken kulambu) மேல் கொத்தமல்லி இலைகளை தூவினால் சுவையான நாட்டுக்கோழி குழம்பு (chicken curry in tamil) ரெடி.

இந்த சுவையான நாட்டுக்கோழி குழம்பை (chicken kulambu) சூடான சாதத்திற்கு, தோசை, இட்லி மற்றும் சப்பாத்தி என்ற அனைத்து உணவுகளுக்கும் சுவையாக இருக்கும்.