திருசிற்றம்பலம் படத்தின் புதிய அப்டேட்

thiruchitrambalam-movie-update
Thiruchitrambalam movie update

நடிகர் தனுஷ் நடித்து வெளியாக உள்ள படம் 'திருச்சிற்றம்பலம்' இப்படத்தினை யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கி  உள்ளார்.

இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். 

'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. திருசிற்றம்பலம் இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை (27-07-2022) வெளியாகவுள்ளது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.