நடிகர் விஜயை வைத்து இயக்கும் சிறுத்தை சிவா

director-siva-going-to-direct-vijay
Director siva going to direct vijay

நடிகர் கார்த்திக் நடித்த சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு  அறிமுகமானவர் இயக்குனர் சிவா. பின்னர், நடிகர் அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

தற்போது, இதனிடையே இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகர் விஜய்யை சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின் போது தனக்கு ஒரு கதை தயார் செய்யுமாறு விஜய், சிவாவிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். விரைவில் விஜய்யின் 68-வது படத்தை சிவா இயக்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.