தெலுங்கானா தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சந்தித்தார் நடிகர் விஜய்..!

vijay-meets-telangana-first-minister-chandrasekhar
தெலுங்கானா தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சந்தித்தார் நடிகர் விஜய்..!

நடிகர் விஜய்  இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில்  நடித்து வருகிறார். இப்படத்திற்கு விஜய் 66 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 6 ம் தேதி படப்பிடிப்பு துவங்கியது. நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இசை அமைக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது. இத்திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை, நடிகர் விஜய் இன்று நேரில் சந்தித்தார். ஐதராபாத்தில் விஜய் 66 படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.