நடிகர் சித்தார்த் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவிப்பு...!

siddharth-planning-to-leave-the-film-industry
நடிகர் சித்தார்த் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவிப்பு...!

பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் சித்தார்த். இவர், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கான சரியான கேரக்டர் கிடைக்கவில்லை என்றால் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து, சினிமாவில் இருந்து விலகி அவர் சொந்த பிசினஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.சமூக வலைதளங்களில் அவர் பதிவு செய்யும் கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சினிமாவில் இருந்து அவர் விலக போவதாக பதிவு செய்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.