நடிகர் தனுஷ் வாத்தி பட அப்டேட்

dhanush-movie-update-with-poster-fans
Dhanush Movie Update with Poster Fans

நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

தனுஷ் திரையுலகிற்கு அறிமுகமாகி 20ஆண்டுகளை கடந்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனுஷ் நீண்ட அறிக்கை ஒன்றை அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தனுஷிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'வாத்தி' படக்குழு போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தனுஷ் தன் முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படத்தில் பள்ளி மாணவனாக நடித்திருந்த புகைப்படத்தையும் தற்போது பள்ளி ஆசிரியராக நடித்து வரும் 'வாத்தி' படத்தின் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்து, 'வாத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.