இயக்குநர் மிஷ்கினினுடன் இணையும் விஜய் சேதுபதி

actor-vijay-sethupathi-in-mysskin-next
actor vijay sethupathi in mysskin-next

பல்வேறு படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய்சேதுபதி, தனது கையில் இருக்கும் அனைத்து படங்களையும் முடித்துவிட்டு, அடுத்ததாக மிஷ்கின் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகிறது.
 
இயக்கியவர் மிஷ்கின். சமீபத்தில் இவர் விஷாலுக்கும் இவருக்கும் நடந்த பிரச்சனையில் அவர் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விளகினார். தற்போது இவர் பிசாசு 2 என்ற படத்தை இயக்கிவருகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளிவர காத்திருக்கிறது. 

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மிஷ்கின் ஒரு படத்தை இயக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags