கொரோனா நிதி திரட்ட சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டம்!

corona-releaf-fund-actor-surya-aishwarya-rajesh
corona releaf fund - actor surya - actress Aishwarya Rajesh

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள  நடிகர், நடிகைகள், திரைப்பட தொழிலாளர்களுக்கு சினிமா சங்கங்கள் மூலம் நிதி வசூலிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மேலும் நிதி திரட்டும் நோக்கில் ஓடிடி தளத்தில் வெளியிட ’நவரசா’ என்ற ஒன்பது கதைகளை கொண்டுள்ள ’ஆந்தாலஜி’ படம் தயாராகிறது. 

இப்படத்தில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி, சித்தார்த், பிரசன்னா, ரோபோ சங்கர், சனந்த், விது, விக்ராந்த், பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ், கவுதம் கார்த்திக், அசோக் செல்வன், ரமேஷ் திலக்,  சரவணன், அழகம் பெருமாள், ரேவதி, நித்யாமேனன், ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணா, பார்வதி, ரித்விகா என நடிகை, நடிகைகள் நடித்து வருகின்றனர்.

 

இந்த ஒன்பது கதைகளையும் மணிரத்னம், கே.வி.ஆனந்த், கார்த்திக் சுப்புராஜ், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்திரன், ஹலிதா ஷமீம், அரவிந்தசாமி உள்ளிட்ட ஒன்பது இயக்குநர்கள் இயக்குகிறார்கள்.

இப்படத்தின் சிறப்பு என்னவென்றால், சம்பளம் வாங்காமல் இலவசமாக  அனைவரும் பணியாற்றுவதாக கூறப்பட்டுள்ளது. இப்படத்தின் உள்ள சில இயக்குநர்கள் அவரவர் கதைகளின் படப்பிடிப்பை முடித்தும் விட்டார்கள்.

நன்மை தரும் திட்டம்.. வெற்றிபெற வாழ்த்துவோம்!