நடிகை சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு

kudos-to-actress-sai-pallavi
actress sai pallavi

மலையாளம், தமிழ் என பல மொழிகளில் நடித்து வரும் சாய்பல்லவி பிஞ்சுக் குழந்தைகளை நெகிழ வைத்துள்ளார்.

பிரேமம் படத்தின் மூலம் என்ட்டிரியான சாய்பல்லவி தமிழ் படமான மாரி 2, என்ஜிகே படங்களில் நடித்து கலக்கினார். தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் ‘லவ் ஸ்டோரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கிராமத்து குழந்தைகளுக்கு சாய் பல்லவி மெஹந்தி வைத்து மகிழ்ந்துள்ளார். இதைப் பார்த்த சக நடிகைகளான சமந்தா, அனுபமா பாராட்டி புகழ்ந்துள்ளனர்.